ETV Bharat / state

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு; நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை கூறியது என்ன? - KKSSR Ramachandran

KKSSR Ramachandran: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதி அறிக்கையில் போதுமான முன்னேற்றம் இல்லை என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் மேல்முறையீடு செய்யவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Madras High Court (File Photo) & KKSSR Photo
Madras High Court (File Photo) & KKSSR Photo (Credit - ETV Bharat tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 7:39 PM IST

சென்னை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இறுதி அறிக்கையில் போதுமான முன்னேற்றம் இல்லை என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் மேல்முறையீடு செய்யவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 2006ஆம் ஆண்டு முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் 44 லட்சத்து 59 ஆயிரத்து 67 ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமானத்திற்கு அதிகமாக சேர்த்ததாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூா்த்தி ஆகியோர் மீது கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 20 அன்று விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்குகளிலிருந்து அமைச்சர் உட்பட அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில், தாமாக முன்வந்து நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் விசாரணை நடத்தினார்.

இந்த வழக்கில், சுலோச்சனா தியேட்டரை 2007-08-ல் ஆறு இடங்கள் விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அமைச்சர் மருத்துவமனையிலிருந்தபோது 8 லட்சத்து 24 ஆயிரம் மாமனார் வேதகிரி செலவு செய்த பணத்தையும், பெட்ரோல் செலவாக 6 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் பணத்தையும் சொந்த வாகனத்துக்குப் பயன்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை குறிப்பிட்டுள்ளது.

மேலும், சுலோச்சனா தியேட்டர் விற்பனை மூலம் கிடைத்த 37 லட்சம் ரூபாய் பங்குதாரர்களின் தொகையும் அமைச்சர் பெயரில் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் வழக்கிலிருந்து விடுவித்த உத்தரவை உறுதி செய்ய வேண்டும். என்ன காரணத்திற்காக? யாரிடம் பணம் பெறப்பட்டது என்பதை ஆதாரங்களுடன் தெரிவித்த பின்னரும், லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என அமைச்சர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு இன்று (ஜூன் 7) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான தலைமை அரசு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இறுதி அறிக்கை அடிப்படையில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. விசாரணையில் எந்த மாறுபட்ட ஆவணங்களும் இல்லை.

விசாரணையில் புதிய ஆவணங்கள் இல்லாத போது வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு உரிமை உள்ளது. இறுதி அறிக்கையின் படி போதுமான ஆவணங்கள் இல்லை என வழக்கு முடித்து வைக்கப்பட்ட பின் மீண்டும் விசாரணை நடத்த முடியாது என தெரிவித்தார். இதையடுத்து ஜூன் 11ஆம் தேதி வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் மீதான சைபர் கிரைம் வழக்கு.. சொந்த ஜாமீனில் விடுவிக்க மகிளா நீதிமன்றம் உத்தரவு! - Savukku Shankar

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.