ETV Bharat / state

நீலகிரி கூடுதல் நீதிபதி பொள்ளாச்சி அருகே விபத்தில் உயிரிழப்பு! - Nilgiri Magistrate Dies In Accident - NILGIRI MAGISTRATE DIES IN ACCIDENT

Nilgiri District Judge Dies In Road Accident: பொள்ளாச்சி அருகே சாலையைக் கடக்க முயன்ற நீலகிரி மாவட்ட நீதிமன்ற கூடுதல் நீதிபதி கருணாநிதி, இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் உயிரிழந்த நீதிபதி கருணாநிதி
விபத்தில் உயிரிழந்த நீதிபதி கருணாநிதி (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 16, 2024, 9:10 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே சின்னம்பாளையம் பகுதியில் வசிப்பவர் கருணாநிதி (58). இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பழனி நீதிமன்றத்தில் இருந்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக மாறுதல் செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் இன்று (ஜூலை 16) மதியம் அவரது வீட்டில் இருந்து பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள மளிகைக் கடைக்கு தனது காரில் சென்று இறங்கி சாலையைக் கடந்துள்ளார்.

அப்போது, உடுமலை சாலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த இருசக்கர வாகனம் நீதிபதி கருணாநிதியின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த நீதிபதி கருணாநிதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நீதிபதி கருணாநிதி உயிரிழந்துள்ளார். இதற்கிடையே, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார், விபத்து நடந்த இடத்திற்கு வந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக, சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை அடிப்படையாக வைத்து நீதிபதி கருணாநிதி மீது இருசக்கர வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து, அந்த நபரைப் பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கிச்சனா இது.. இருந்தாலும் பரவால்ல.. தங்கத்தோடு அரிசி பருப்பையும் திருடிச் சென்ற மர்ம நபர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.