ETV Bharat / state

சென்னையில் 9 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை..! - NIA Raid In Tamil Nadu

தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆட்கள் சேர்த்தது தொடர்பான வழக்கில் சென்னையில் 9 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 14 இடங்களில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2024, 5:05 PM IST

சென்னை: கடந்த ஜூன் மாதம் ஒரு யூடியூப் சேனலில், தடை செய்யப்பட்ட ஹிஸ்பு - உத் - தஹீர் இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகள் இருந்ததை சென்னை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்து, விசாரணை செய்தனர். இதில், சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த ஹமீது உசேன் என்பவர் டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ் என்ற பெயரில் அந்த யூ-டியூப் சேனல் நடத்தப்பட்டது தெரியவந்தது.

மேலும், இந்த யூ-டியூப் சேனல் மூலம் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக பேசி, மூளைச் சலவை செய்து இளைஞர்களை திரட்டி வந்ததும், ராயப்பேட்டை ஜானிஜான்க்கான் சாலையில் இதற்காக அலுவலகம் அமைத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரகசிய கூட்டம் நடத்தி, தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகளை பரப்பி வந்ததும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, இது தொடர்பாக சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஹமீது உசேன், அவர் சகோதரர் அப்துல் ரகுமான் உள்பட 6 பேரை கைது செய்தனர். ஹமீது உசேன் கெளரவ பேராசிரியராக பணியாற்றிக் கொண்டு ஹிஸ்பு-உத்-தஹீர் இயக்க ஆதரவாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.

இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு தொடர்பாக, 10 இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். அதில் முக்கியமான ஆவணங்களை கைப்பற்றப்பட்டது. பின்பு சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில், தேச விரோத செயலுக்குரிய சட்டப்பிரிவுகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு சட்ட பிரிவுகள் சேர்க்கப்பட்டிருந்ததால் வழக்கின் விசாரணை என்ஐஏ-வுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: சாம்சங் ஊழியர்களுக்கு எச்சரிக்கை: அடையாள அட்டை, தீபாவளி போனஸ் கிடைக்காது?

இதையடுத்து, சென்னை என்ஐஏ அதிகாரிகள், புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கினர். சர்வதேச தொடர்புகள் இந்த வழக்கில் இருப்பதாக என்ஏஐ சந்தேகிப்பதால், விரைவில் இந்த விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என கூறப்பட்டது.

இந்த நிலையில், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், இன்று (செப்.24) அதிகாலை முதல் சென்னையில் 9 இடங்கள் உட்பட தமிழ்நாட்டில் 14 இடங்களில், இந்த வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் வகையில் என்ஐஏ அதிகாரிகள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னையை பொறுத்தவரை ராயப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஏழுகிணறு, நீலாங்கரை, வெட்டுவாங்கேணி மற்றும் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், நன்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது. அதிகாலை முதல் நடைபெறும் இந்த சோதனையில் டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ தரப்பில் கூறப்படும் நிலையில், சோதனை நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.