ETV Bharat / state

தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பு? விசாரணையில் இறங்கிய என்ஐஏ! - NIA investigation - NIA INVESTIGATION

National Investigation Agency: தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்த விவகாரத்தில் சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணையில் இறங்கியுள்ளது.

போலீசார் விசாரணை நடத்திய கல்வி அமைப்பு
போலீசார் விசாரணை நடத்திய கல்வி அமைப்பு (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2024, 4:03 PM IST

சென்னை: ஹிஜிபுதாகிர் சர்வதேச தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஆதரவாளர்கள் மூன்று பேரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (UAPA) பாய்ந்துள்ளது.

குறிப்பாக, கைதான மூன்று பேரும் பல வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இஜிபுதாஹிர் அமைப்பின் மூலமாக உலகளாவிய காலிபெட் இஸ்லாமியக் கொள்கை முறையை ஷரியா சட்டத்தின் அடிப்படையில் கொண்டு வர முயற்சித்ததாக தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக, கைதானவர்கள் அமீர் உசேன் என்ற பொறியாளரும், அவரது தந்தை மன்சூர் மற்றும் சகோதரர் அப்துல் ரகுமான் ஆவர்.

சென்னையில் முதன்முறையாக இது போன்ற சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அந்த அமைப்பின் ஐடியாலஜியைப் பரப்புவது முக்கியமாக செய்து வருவது தெரிய வந்துள்ளது. அமீர் ஹுசைன் youtube-களில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

குறிப்பாக, பொதுத் தேர்தலுக்கு எதிரான கொள்கையைக் கொண்டிருக்கிற காரணத்தினால் அதற்கு ஏற்றார்போல் பல்வேறு கருத்துக்களை மக்களிடம் பரப்பி வருவதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும், இந்த அமைப்பின் கொள்கைப்படி, ஜனநாயகத்தின் நம்பிக்கை இல்லாமல் காலிபெட் கொள்கை முறையில் மக்கள் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக, தற்போது நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமியர்கள் வாக்களிக்கக் கூடாது என பரப்புரை மேற்கொண்டு வந்ததாக தகவல் தெரிகிறது. மேலும், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கூட்டங்கள் நடத்துவதும், குறிப்பிட்ட நபர்களை மட்டும் அழைத்து பூட்டப்பட்ட அறைக்குள் கூட்டங்களை நடத்தியதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சென்னை இராயப்பேட்டையில் உள்ள ஜானி ஜான்கான் தெருவில் Modern essential education trust என்ற அமைப்பை நடத்தி வந்ததாகவும், அங்கு அதிகளவு கூட்டங்களை நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு வாரம் நடத்தப்பட்ட கூட்டங்களில் ஆட்கள் அதிகமாகிக் கொண்டே சென்று இருப்பதாகவும் கண்டுபிடித்துள்ளனர். தற்போது இவர்கள் பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொண்டு வருவதாக போலீசார் கண்டுப்பிடித்துள்ளனர். இந்த 3 பேர் மீதும் ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர்.

இவர்களுடன் தொடர்பிற்கும் நபர்கள் யார் என்பது குறித்தும் இதற்கு நிதி எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் நடத்தி வந்த விசாரணை தற்போது தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைக்கப்பட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் இருந்து விவரங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் கேட்டு பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: டெல்லியில் பயங்கர தீ விபத்து: 6 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு.. நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து.. சிலிண்டர் வெடிப்பா? - 6 Babies Died In Delhi

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.