ETV Bharat / state

திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டையில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை! - NIA RAID IN TN

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 30, 2024, 2:35 PM IST

NIA RAID IN TN: சென்னை, திருச்சி, கும்பகோணம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 இடங்களில் இன்று காலை முதல், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (NIA) அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

என்.ஐ.ஏ. சோதனை
என்.ஐ.ஏ. சோதனை (CREDITS - ETV Bharat Tamil Nadu)

திருச்சி: சென்னை, திருச்சி, கும்பகோணம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, 'ஹிஸ்புத் தஹ்ரீர்' என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருந்த நபர்களின் இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூரில் என்.ஐ.ஏ சோதனை (CREDITS- ETV Bharat Tamil Nadu)

இதன் ஒருபகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலத்தை சேர்ந்த அப்துல் காதர் என்பவருக்கும் ஹிஸ்புத் தஹ்ரீர் இயக்கத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் அவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அவரது மகனான அப்துல் ரகுமான் (25) திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு நேற்றிரவு சென்றிருக்கிறார். இதை அப்துல் ரகுமான் செல்போன் டவர் மூலம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அறிந்த நிலையில், இன்று காலை சுப்பிரமணியபுரத்தில் உள்ள அப்துல் ரஹ்மானின் உறவினர் வீட்டிற்கு சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தற்போது விசாரணை முடிந்து அப்துல் ரஹ்மானை தஞ்சாவூர் அழைத்துச் சென்றுள்ளனர்.

ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்புடன் தொடர்பு? தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்ஐஏ சோதனை - NIA raid in TN

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வடகாடு என்ற பகுதியில் வசித்து வரும் அப்துல்கான் என்ற அப்துல் காதர் (40) என்பவரின் தோட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இவர் தடை செய்யப்பட்ட சிமி அமைப்பில் உறுப்பினர் மற்றும் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக கருதப்படுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் இறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 4 பெண்களுடன் தொடர்பு.. ஐந்தாவதாக 17 வயது சிறுமியை கடத்திச் சென்ற நபர் போக்சோவில் கைது! - Tirupathur POCSO arrest

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.