ETV Bharat / state

கொடைக்கானலில் புதிதாக கட்டப்பட்ட 100 அடி நீள சுவர் சரிந்து விபத்து! கடைகள் இடிந்து தரைமட்டம்! என்ன நடந்தது? - wall collapses in Kodaikanal

Wall Collapse: கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் புதியதாக கட்டப்பட்ட சுமார் 100 அடி நீளமுள்ள சுவர் சரிந்து விபத்து ஏற்பட்டதில், 10க்கும் மேற்பட்ட கடைகள் சேதம் அடைந்தன.

கொடைக்கானலில் புதிதாக கட்டப்பட்டு வந்த 100 அடி நீளமுள்ள சுவர் சரிந்து விபத்து

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 4:11 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள முக்கிய குடியிருப்பு பகுதியான நாயுடுபுரம் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படுவது வழக்கம். இங்குள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட தகர கடைகள் அமைத்து அக்கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடைக்கு பின்புறம் இருக்கக்கூடிய காலி நிலத்தில் கடந்த சில நாட்களாக சுமார் 100 அடி நீளத்தில் சுவர் கட்டப்பட்டு வந்தது.

கொடைக்கானலில் புதிதாக கட்டப்பட்டு வந்த 100 அடி நீளமுள்ள சுவர் சரிந்து விபத்து

இதனிடையே இன்று (பிப்.15) நண்பகல் வேளையில் திடீரென அருகே இருந்த கடைகள் மீது அந்த சுவர் சாய்ந்து பெரும் விபத்துக்கு உள்ளானது. இதில் இங்கு இருக்கும் 10க்கும் மேற்பட்ட கடைகள் சேதம் அடைந்தன. மேலும் இரண்டு கடையில் இருந்த இருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் சரிந்த சுவரின் ஒரு பாதி மீண்டும் சாயும் ஆபத்தான நிலையில் இருப்பதால், அதன் அருகே இருக்கக்கூடிய கடைகளில் உள்ள பொருட்களை மீட்டு வேறு இடத்திற்கு வாகனங்கள் மூலம் எடுத்து செல்கின்றனர். அதிஷ்டவசமாக மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால், நடைபெறவிருந்த பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

இதையும் படிங்க: வண்டலூர் பூங்காவில் 2 அனுமன் குரங்குகள் தப்பியோட்டம்.. மன உளைச்சலில் பெண் ஊழியர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.