தஞ்சாவூர்: கும்பகோணம் தேப்பெருமாநல்லூர் குருமூர்த்தி நகரில் 2022ல் நடைபெற்ற கொலை வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் வேலப்பனுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 302 சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ராதிகா முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞராக விஜயகுமார் ஆஜர் ஆனார்.
அப்போது, இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள ‘பாரதீய நியாய சம்ஹிதா 2023’ சட்டத்தின் 103 (1) கீழ் இந்த வழக்கு மாற்றப்பட்டு, குற்றச்சாட்டு பதியப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டத்துக்கு பதிலாக இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘பாரதிய நியாய சம்ஹிதா’ சட்டத்தின்கீழ் தமிழகத்தில் முதல் வழக்காக இந்த சட்டப்பிரிவின் கீழ் ஒரு கொலை வழக்கின் விசாரணை, கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 99% காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன; உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்! -