ETV Bharat / state

மணல்மேடு டூ திருவாரூர் இடையே புதிய பேருந்து சேவை: பயணிகளுடன் பஸ் ஓட்டிய மயிலாடுதுறை எம்.எல்.ஏ! - New bus service started

Mayiladuthurai New bus service: மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்த எம்.எல்.ஏ, பேருந்தை சுமார் 22 கி.மீ தூரம் வரை இயக்கி பொதுமக்களை ஏற்றிச் சென்ற செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

new bus service started in mayiladuthurai
மயிலாடுதுறையில் புதிய பேருந்து சேவை தொடக்கம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 11:21 AM IST

மயிலாடுதுறையில் புதிய பேருந்து சேவை தொடக்கம்

மயிலாடுதுறை: மணல்மேடு பேருந்து நிலையத்தில் இருந்து பட்டவர்த்தி மற்றும் மயிலாடுதுறை வழியாக திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய வழித்தடத்தில், புதிய அரசு பேருந்து சேவை நேற்று (பிப்.8) துவக்கப்பட்டது. மணல்மேடு மற்றும் பட்டவர்த்தி வழியாக மயிலாடுதுறைக்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும், உரிய நேரத்தில் செல்வதற்கு பேருந்துகள் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

மேலும், பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கிய படி ஆபத்தான நிலையில் பயணம் செய்து பணிக்குச் சென்றனர். இந்நிலையில், இப்பகுதிக்கு புதிய பேருந்து வசதி வேண்டுமென நீண்ட நாட்களாக பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது இந்த கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் நேற்று மணல்மேட்டில் இருந்து பட்டவர்த்தி வழியாக திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய பேருந்து சேவையினை தொடங்கி வைத்தார்.

அந்த வகையில், மணல்மேடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் புதிய பேருந்தை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் கொடியசைத்து துவக்கி வைத்ததுடன், தானே பேருந்தை ஓட்டிச் சென்றார். மணல்மேடு, திருவாளபுத்தூர், பட்டவர்த்தி, மல்லிகை கொல்லை, வில்லியநல்லூர், நீடூர் வழியாக மயிலாடுதுறை பேருந்து நிலையம் வரை வந்த புதிய பேருந்தை, கிராம மக்கள் வழிநெடிகளும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக வரவேற்றனர்.

அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் பயணிகளை ஏற்றி, இறக்கிய சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், சுமார் 22 கிலோமீட்டர் தூரம் வரை புதிய பேருந்தை ஓட்டிச் சென்றார். பொதுவாக புதிய பேருந்து சேவையினை துவங்கி வைக்கும் மக்கள் பிரதிநிதிகள், அவர்களுக்கு பேருந்தை இயக்க தெரியும் என்ற பட்சத்தில் சில அடி தூரம் பேருந்தை இயக்குவது வழக்கம்.

அதேபோன்று தான் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பேருந்தை ஓட்ட துவங்கியதும், பலரும் அவர் சில தூரம் வரை ஓட்டிச் செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக 22 கிலோ மீட்டர் தூரம் வரை பேருந்தை ஓட்டி, ஓட்டுநராக மாறி அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் பேருந்தை நிறுத்தி பொதுமக்களை ஏற்றி, இறக்கிய நிகழ்வு பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த புதிய வழித்தடத்தில் இயக்கப்படும் இப்பேருந்தானது மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லவும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்பவர்களுக்காகவும் இயக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "தமிழக அரசின் திட்டங்கள் வெற்றியடைய, மகளிர் சுய உதவிக் குழுவின் பங்களிப்பு அதிகம்" - உதயநிதி ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.