திருநெல்வேலி: நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகிறது. நெல்லை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், அதிமுக சார்பில் ஜான்சி ராணி, நாம் தமிழர் சார்பில் சத்தியா ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்நிலையில், நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் 15வது சுற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 3,46,857 வாக்குகளும், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 2,35,476 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி 61,347 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சத்யா 63,480 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதில் ராபர்ட் புரூஸ் 1,11,381 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். . மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சியும் தொடர்ந்து நான்காவது இடத்தில் அதிமுகவும் இருந்து வருகிறது.
பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறார். எனவே அவருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் வாக்கு எண்ணும் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் முடிவு சாதகமாக அமையாததால் நயினார் நாகேந்திரன் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறினார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இதுவரை வெளியான முடிவில் ராபர்ட் ப்ரூஸ் முன்னிலையில் உள்ளார்.. இனி முடிவுகள் மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.. பொதுமக்கள் போட்ட ஓட்டு முடிவு எதுவாக இருந்தாலும் அதை வரவேற்கிறேன்.. மக்கள் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வருத்தத்துடன் கூறிவிட்டு புறப்பட்டார்.
இதையும் படிங்க: 'மற்றவை' இல்ல 'மூணாவது'... அதிமுகவை பின்தள்ளிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்!