கன்னியாகுமரி: டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் வந்து இறங்கினார்.
பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக குமரிக் கடல் அருகே வந்த மோடி, அங்கிருந்து பலகட்ட பாதுகாப்புடன் விவேகானந்தர் பாறைக்குச் சென்றார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதை அடுத்து, உள்ளே சென்று தியானத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக விவேகானந்தர் பாறையைச் சுற்றி பலகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரதமரின் வருகையை ஒட்டி, வான்வழி பயணமான ஹெலிகாப்டர் பாதுகாப்பு ஒத்திகை மற்றும் தரை வழியாக அவர் செல்லும் பகுதிகளில் தீவிர சோதனைகளும் நடைபெற்றது. அதேபோன்று, கடல் வழியில் அவர் பயணிக்கவிருக்கும் படகு மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தைச் சுற்றிலும் உள்ள கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், கடற்படை போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகளின் ஆதார் அட்டை சரிபார்ப்பு மற்றும் விலாசம் பெறப்பட்டு அவர்கள் முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே சுற்றுலா பகுதிகளுக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோன்று கன்னியாகுமரியில் இயங்கி வரும் அனைத்து தனியார் தங்கும் விடுதிகளிலும் தங்கி இருப்பவர்களின் விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு, தனியார் தங்கும் விடுதிகளில் சோதனையும் போலீசாரால் நடத்தப்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் குமரி வருகை மற்றும் விவேகானந்தர் பாறையில் மேற்கொள்ளும் தியானம் குறித்து மேலும் அறிய கீழ்க்கண்ட லிங்குகளை கிளிக் செய்யவும்.
இதையும் படிங்க: கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.. சுற்றுலா பயணிகளுக்கான கட்டுப்பாடு என்ன?
இதையும் படிங்க: "மோடி அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்" - உயர்நீதிமன்ற பதிவாளரிடம் காங்கிரஸ் மனு
இதையும் படிங்க: நாளை மோடி குமரி பயணம்; திமுக, காங்கிரஸ், சிபிஐ(எம்) எதிர்ப்பு!