ETV Bharat / state

எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை புகழ்ந்த மோடி; அதிமுகவை பாஜகவுடன் இணைக்க மோடி திட்டமா? - எம்ஜிஆர் ஜெயலலிதா பற்றி மோடி

Modi about mgr and Jayalalithaa: திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற “என் மண் என் மக்கள்” யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, எம்.ஜி.ஆரை அவமதிப்பது போல திமுக ஆட்சி நடைபெறுகிறது என விமர்சித்துள்ளார்.

எம்.ஜிஆர், ஜெயலலிதா குறித்து பேச்சு
'என் மண் என் மக்கள்' நிறைவு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2024, 6:52 PM IST

திருப்பூர்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட “என் மண் என் மக்கள்” பாத யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, எம்.ஜிஆர், ஜெயலலிதா குறித்து பேசியுள்ளார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிரதமர் மோடி, திருப்பூர் பல்லடம் பகுதியில், இன்று (பிப்.27) நடைபெற்ற “என் மண் என் மக்கள்” பாத யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது விழாவில் பேசிய பிரதமர் மோடி, “இன்று தமிழகம் வந்துள்ள நான், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை நினைத்து பார்க்கிறேன். ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி போன்றவற்றை செய்தவர், எம்.ஜிஆர். அதனால்தான் அவர் இப்போது வரை மக்களால் நினைத்து பார்க்கப்படுகிறார்.

அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரை அவமதிப்பது போல திமுக ஆட்சி நடைபெறுகிறது. எம்.ஜி.ஆரைப் போலவே ஜெயலலிதாவும் மக்கள் மனதில் நிலை பெற்றுள்ளார். ஜெயலலிதாவுடன் நட்புறவுடன் பழகியவன் என்ற முறையில் நான் கூறுகிறேன். ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களோடு எந்த வகை தொடர்பு கொண்டிருந்தார் என்பது எனக்கு தெரியும்.

தமிழகத்தில் கடைசி நல்லாட்சியைக் கொடுத்தவர் ஜெயலலிதாதான். அவருக்கு இந்த இடத்தில் நான் அஞ்சலி செலுத்துகிறேன். மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. குடும்ப ஆட்சியை எப்படி நடத்துவது என இந்தியா கூட்டணி சிந்தித்து வருகிறது” என கூறியுள்ளார்.

முன்னதாக, பாஜக உடனான கூட்டணி முறிவை அதிகாரப்பூர்வமாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதேநேரம், இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தான் பங்கேற்கும் பல்வேறு நிகழ்வுகளின் வாயிலாக தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், அதிமுக நிறுவனர் மற்றும் அதன் தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா குறித்து பேசியது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி.. திருப்பூர், மதுரை, நெல்லை நிகழ்ச்சிகள் என்னென்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.