ETV Bharat / state

வளர்ச்சியைத் தடுக்க முயற்சி செய்கின்றனர்.. MyV3 Ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு! - MyV3 Ads நிறுவனம்

MyV3 Ads: அரசியல் கட்சிப் பெயர்களைக் கூறி தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும், தனது வளர்ச்சியைத் தடுக்க முயற்சி செய்கின்றனர் எனவும் மைவி3 நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

MyV3 Ads நிறுவன உரிமையாளர்
சக்தி ஆனந்தன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 10, 2024, 1:59 PM IST

MyV3 Ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன்

கோயம்புத்தூர்: மைவி3 நிறுவனத்தின் செயல்பாடுகளுக்காக, கோவை ஆனைகட்டி பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டிற்கு 10 புதிய வாகனங்கள் வழங்கும் துவக்க விழா இன்று (பிப்.10) நடைபெற்றது. இதில், நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் கலந்து கொண்டு வாகனங்களை வழங்கினார்.

பின்னர், மைவி3 நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் கூறியதாவது, “ஹெல்த் கேர், ஹோம் கேர் உள்ளிட்ட 87 விதமான பொருட்கள் விற்பனை செய்து வருகின்றோம். தமிழகத்தை 9 மண்டலமாகப் பிரித்து செயல்பட்டு வருகிறோம். மாநகர குற்றப்பிரிவு விசாரணை குறித்த கேள்விக்கு, கார்ப்பரேட் நிறுவனங்களின் அழுத்தம், தன்னிடம் உள்ள கூட்டத்தின் சந்தேகத்தால், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பாக இருக்கலாம். பொதுவாக தொழிலில் நெருக்கடி இருக்கிறது. எனவே, வளர்ச்சியைத் தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபடுபவர்களிடமிருந்து நாங்கள் வெளி வருவோம்.

மைவி3 டிவி நிறுவனத்தில், நான் முதலில் வேலை செய்துள்ளேன். இடையில், கரோனா காலத்தில் ஒரு சில தடங்கல்கள் இருந்தது. இதனால், தான் தனியாக my v3 ads marketing என்ற புதிய நிறுவனத்தை தொடங்கினேன். நிறுவனத்தின் மீது புகார் அளித்துள்ளவர்கள் உண்மையாக பாதிக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட இத்தனை ஆண்டுகளாக என்ன செய்தனர் என்று கேள்வி எழுப்பினார். அவர்கள் தன் வளர்ச்சியைக் கண்டு இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

யுனிசெப் (UNICEF) டாக்டர் பட்டம் கொடுத்து இருப்பது வழக்கமான ஒன்று. அது ஒரு கௌரவம் மட்டுமே. நிறுவனத்தின் மீது பொய் குற்றச்சாட்டுகளைக் கூறினர். அவற்றை மறுத்ததால், வேறு விதமான வதந்திகளை பரப்பி வருகின்றனர். நான் தொழில் முனைவோர், என் நோக்கம் தொழில் மட்டும். அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கம் கேள்வி கேட்டால், பதில் அளிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், நேரடியாக கட்சி பெயரைக் கூறி என்னை தொந்தரவு செய்யாதீர்கள்” என்றார்.

அதனைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஸ்ரீ கார்த்திக் கூறியதாவது, “இரண்டரை வருடத்திற்கு முன்பாக இதில் சேர்ந்தேன். தற்போது, இவற்றின் மூலமாக ஒரு நாளைக்கு ரூ.ஆயிரத்து 800 பெறுகிறேன். இதன் மூலம், ஒரு மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வருகிறது. my V3 ads வராமல் இருந்தால் பல நெருக்கடியைச் சந்தித்திருப்பேன்” என்றார்.

இதையும் படிங்க: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் – கட்டம்-II; விரைவில் ஒப்புதல் வழங்க பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.