ETV Bharat / state

நிலமோசடி வழக்கு; எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி! - MR Vijayabaskar Interim bail - MR VIJAYABASKAR INTERIM BAIL

MR Vijayabaskar: ரூ.100 கோடி நிலமோசடி தொடர்பான வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த இடைக்கால முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

MR Vijayabaskar
கரூர் நீதிமன்றம் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 9:46 PM IST

கரூர்: கரூர் வாங்கல் அருகே உள்ள காட்டூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷின் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை தான் கூறும் நபர்களுக்கு விற்பனை செய்ய கட்டாயப்படுத்தியதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் தொடர்ந்து அடியாட்களை வைத்து அச்சுறுத்தி தாக்கியதாக வாங்கல் காவல் நிலையத்தில் தொழிலதிபர் பிரகாஷ் அளித்த புகார் அடிப்படையில், ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கரூர் நகர் பகுதியில் அமைந்துள்ள மேலக்கரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில், கடந்த மாதம் சந்தேகப்படும் வகையில் நான்கு பேர் வழங்கிய ஆவணங்கள் பரிசீலனை செய்ததில், ஈரோடு சித்தார்த்தன், காஞ்சிபுரம் ரகு, கரூர் மாரப்பன் மற்றும் செல்வராஜ் ஆகியோர் கூட்டாக மோசடியில் ஈடுபட்டு, தொழிலதிபர் பிரகாஷின் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய முற்பட்டதாக மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர், கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த ஜூன் 18ஆம் தேதி திடீரென சிபிசிஐடி வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

பின்னர், இந்த வழக்கில் தனது பெயரை சேர்க்கக்கூடும் என தாமாக முன் சென்று, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுவினை எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நிறைவுற்று, ஜூன் 25ஆம் தேதி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, ஜூலை 1ஆம் தேதி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் இரண்டு ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். அதன் மீதான விசாரணை, நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக, முன் ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது, நாளை தீர்ப்பு வழங்குவதாக ஒத்திவைத்து, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம், இடைக்கால ஜாமீன் மனுவை மட்டும் இன்று தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னதாக, இடைக்கால முன் ஜாமீன் மனுவில் தனது தந்தை உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளதால், நான்கு நாட்கள் மட்டும் முன்ஜாமீன் வழங்குமாறு எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு இடைக்கால முன் ஜாமீன் தாக்கல் செய்திருந்தார். இந்த இடைக்கால முன் ஜாமீன் மனுவும் ரத்து செய்யப்பட்டதால், நாளை சாதாரண முன் ஜாமீன் மனுவும் ரத்து செய்யப்படக்கூடும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, ரூ.100 கோடி நில மோசடி வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தனிப்படைகள் அமைத்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கடந்த 15 நாட்களாக தேடிவரும் நிலையில், அவர் கரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.