ETV Bharat / state

தொடர்ந்து குரல் கொடுத்ததன் விளைவாகக் கரோனாவின் போது ஏற்றப்பட்ட கட்டண உயர்வை ரயில்வே திரும்பப் பெற்றது - எம்.பி சு.வெங்கடேசன் கருத்து.. - railways withdrawal fare increase

MP Su Venkatesan about train fare: கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வு தற்போது திரும்பப் பெறப்பட்டிருப்பது இரண்டு ஆண்டுக்காலப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.

எம்.பி சு.வெங்கடேசன் கருத்து
கரோனாவின்போது ஏற்றப்பட்ட கட்டண உயர்வை ரயில்வே திரும்பப் பெற்றது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2024, 3:33 PM IST

மதுரை: நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்ததன் விளைவாகக் கரோனா கால கட்டத்தில் உயர்த்தப்பட்ட ரயில்வே கட்டணம் தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார். இந்த மாற்றம் மதுரை, சென்னை, திருச்சி கோட்டங்களுக்கு மட்டும் செய்யப்பட்டுள்ள நிலையில் சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய கோட்டங்களுக்கும் மாற்றப்பட வேண்டும் என ரயில்வே வாரியத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் இன்று (பிப்.27) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; “கரோனா காலத்தில் சாதாரணக் கட்டணப் பயணிகள் வண்டிகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் அவை சிறப்பு விரைவு ரயில்களாக அறிவிக்கப்பட்டு விரைவு ரயில்களுக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டது. எளிய மக்களிடமிருந்து இரண்டு மடங்குக் கட்டணத்தை வசூலிக்கும் கொடிய செயலாக இது இருந்தது.

இதனைக் கைவிட வேண்டும் என நான் உட்படப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தோம். ரயில்வே அமைச்சரிடம் நேரடியாகவும் வலியுறுத்தினோம். நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சனையை எழுப்பியுள்ளோம். ஒரு வாரத்துக்கு முன்பு ரயில்வே வாரியம் தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்களில் சாதாரணக் கட்டணம் வசூலிக்க ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் கவுண்டர்களில் விரைவுக் கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது.

தென்மேற்கு ரயில்வே அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும், சிறப்பு விரைவு ரயில்களில் சாதாரணப் பயணக் கட்டணம் வசூலிக்க அறிவுறுத்தி உள்ளது. தெற்கு ரயில்வேயில் மதுரை, சென்னை, திருச்சி கோட்டங்கள் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் சிறப்பு விரைவு ரயில்களில் சாதாரணக் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளன. இன்னும் சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்கள் உத்தரவிடவில்லை. உத்தரவிடப்பட்டுள்ள கோட்டங்கள் இன்று முதல் சாதாரணக் கட்டணம் வசூலிக்க உள்ளன. பாலக்காடு, திருவனந்தபுரம், சேலம் கோட்டங்களில் விரைவுக் கட்டணமே வசூலிக்கப்படும் முரண்பாடு நிலவுகிறது.

ரயில்வே வாரியம் இதற்கான உத்தரவை அனுப்பாததால் இந்த முரண்பாடு நிலவுகிறது. இரயில்வே துறை வெளிப்படையாக அறிவித்தால் எதிர்க்கட்சி கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாகக் கருதப்படும் எனக்கருதியதால் இப்படிச் செயல்படுத்தியிருப்பதாகவே தோன்றுகிறது. அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் பொருந்தும் படி, அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் சிறப்பு விரைவு ரயில்களில் சாதாரணக் கட்டணம் வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று நான் ரயில்வே வாரியத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.

இதில், காலதாமதம் செய்தால் அது பயணிகளிடையேயும் ரயில் துறையினரிடமும் பாரபட்சத்தை உருவாக்கும். மக்கள் பாதிப்பு தொடரும். எனவே ரயில்வே வாரியம் விரைந்து இதற்கான உத்தரவை அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பஸ் விபத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்: ரூ.91 லட்சம் இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.