ETV Bharat / state

“ஒரு பெண் இயக்குனர் கூட இல்லை, விதிகளை மீறும் கம்பெனிகள்”.. அரசுக்கு சு.வெங்கடேசன் கோரிக்கை!

Su Venkatesan MP: இந்தியாவில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் ஒரு பெண் இயக்குனர் கூட இல்லாமல் இயங்குகின்றன எனவும், அரசியல் உறுதியோடு கம்பெனிகள் மீதான கடும் நடவடிக்கை எடுக்கிற மாற்றங்களை அரசு கொண்டு வர வேண்டும் என்றும் சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
சு.வெங்கடேசன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 1:33 PM IST

மதுரை: நூற்றுக்கணக்கான கம்பெனிகள் சட்டம் (Company Act ) வந்து 10 ஆண்டுகள் ஆகியும், விதி மீறல்களை தொடர்வதற்கான காரணங்களை ஆராய வேண்டும் என்று சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, “2013 கம்பெனிகள் சட்டத்தில், பிரிவு 149-இன் படி, 100 கோடி செலுத்தப்பட்ட மூலதனம் அல்லது 300 கோடி குறைந்தபட்ச விற்பனை உள்ள கம்பெனிகள் தங்கள் இயக்குநர் அவையில், ஒரு பெண் இயக்குனரைக் கொண்டிருக்க வேண்டும்.

பாலின சமத்துவ நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட இந்த அம்சம், எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை அறிய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்துள்ள பதில் விவரங்களில், எந்த அளவுக்கு நூற்றுக்கணக்கான கம்பெனிகள், பாலின சமத்துவ பார்வை இன்றி, பெண் இயக்குனர் சம்பந்தமான விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளன என்பது வெளி வந்துள்ளது.

2016 முதல் 2024 காலத்தில், 81 கம்பெனிகள் மீது தண்டத் தொகையாக (Penalty amount) ரூ.1.41 கோடி விதிக்கப்பட்டுள்ளது. 2018-லிருந்து ‘செபி’ (SEBI-Securities and Exchange Board of India) அமைப்பு விதிகளின்படி டெல்லி, மும்பை பங்குச் சந்தைகள் விதித்துள்ள தண்டத்தொகை விவரங்களை சேர்த்தால், 2019 முதல் 2024 வரையிலான காலத்தில் 432 கம்பெனிகள் மீது ரூ.25 கோடி தண்டம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பதில், எந்த அளவுக்கு நூற்றுக்கணக்கான கம்பெனிகள் சட்ட மீறல்களில் ஈடுபடுகின்றனர், ஒரு பெண் இயக்குனர் கூட இல்லாமல் கம்பெனிகள் நடத்தப்படுகிறது, பாலின சமத்துவம் குறித்த அக்கறை இன்றி செயல்படுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்துகிறது. நூற்றுக்கணக்கான கம்பெனிகள் சட்டம் (Company Act ) வந்து 10 ஆண்டுகள் ஆகியும், செபி விதிமுறைகள் வந்து 6 ஆண்டுகள் ஆகியும், மீறல்களைத் தொடர்வதற்கான காரணங்கள் ஆராய வேண்டும்.

ரூ.100 கோடி மூலதனம், ரூ.300 கோடி விற்பனை உள்ள கம்பெனிகள், 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை தண்டத்தொகையைக் கட்டி விட்டு தப்பித்துக் கொள்வது எளிதாக உள்ளது. இயக்குனர் நியமனங்களில் அரங்கேறும் மீறல்கள், கிரிமினல் குற்றமாக கருதப்படாது என்று 2020-இல் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் இத்தகைய துணிச்சலை அவர்களுக்கு தந்துள்ளது. ஆகவே, அரசியல் உறுதியோடு கம்பெனிகள் மீதான கடும் நடவடிக்கை எடுக்கிற மாற்றங்களை அரசு கொண்டு வர வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'கடைசி விவசாயி' பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருட்டு; தேசிய விருதுகளையும் எடுத்துச் சென்றதாக தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.