ETV Bharat / state

எம்.பி கதிர் ஆனந்த் பணம் பறிமுதல் வழக்கு: நீதிமன்றம் ஒத்திவைப்பு! - MP Kathir Anand Case - MP KATHIR ANAND CASE

mp Kathir Anand case: 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பணம் கையக்கப்படுத்தப்பட்டது தொடர்பான வழக்கில் வேலூர் திமுக எம்.பி கதிர் ஆனந்த் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

எம்.பி கதிர் ஆனந்த் மற்றும் வேலூர் நீதிமன்றம்
எம்.பி கதிர் ஆனந்த் மற்றும் வேலூர் நீதிமன்றம் (credits-ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 20, 2024, 7:23 PM IST

வேலூர்: கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

வருமான வரித்துறை நடத்திய இந்த சோதனையில் 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடு, பூஞ்சோலை சீனிவாசன் சிமெண்ட் கிடங்குகளில் சோதனை நடத்தி 11.55 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காட்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பான வழக்கில் வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் மற்றும் பூஞ்சோலை சீனிவாசன் ஆகியோர் இன்று (ஜூன்.20) வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இவ்வழக்கு விசாரணை அடுத்த மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

இதையும் படிங்க: 2,327 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ அறிவிப்பு வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.