ETV Bharat / state

"அடங்காப்பிடாரி அமலாக்கத்துறை" - சீறிய சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம்! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

Karti Chidambaram: அமலாக்கத்துறையின் வழக்கு எல்லாவற்றிற்கும் கைது தேவையே கிடையாது எனவும், அடங்காப்பிடாரியான அமலாக்கத்துறையை நீதிமன்றம்தான் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.

mp Karti Chidambaram
mp Karti Chidambaram
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 11:35 AM IST

எம்பி கார்த்திக் சிதம்பரம் மானாமதுரையில் பேட்டி

சிவகங்கை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கி நாடு முழுவதும் பரபரப்பாக உள்ளது. இந்த நிலையில், மானாமதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய கார்த்தி சிதம்பரம், "இரண்டாவது முதலமைச்சரை பாஜக அரசு தனது கைப்பாவையான அமலாக்கத்துறை மூலம் கைது செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். குறிப்பாக இந்தியாவின் தலைநகரம், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைத் தேர்தலுக்கு முன்பாக கைது செய்திருப்பது முழுக்க முழுக்க பலி வாங்கும் செயலாகவும், எதிர்க்கட்சிகளை முடக்கும் செயலாகத் தான் பார்க்க முடிகிறது.

காங்கிரஸ் கட்சிகளின் கணக்குகளை எல்லாம் முடக்கி, வங்கிக் கணக்கைச் செயல்படுத்த முடியாத அளவிற்குச் செய்துள்ளனர். தற்போது பாஜகவின் நோக்கம் என்னவென்றால், தேர்தலின் போது எதிர்க்கட்சி தலைவர்கள் செயலிழந்து இருக்க வேண்டும் என்பதுதான். அமலாக்கத்துறை சோதனை கைது தேவையே கிடையாது. ஏனென்றால் பணப்பரிமாற்றம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். அதனை நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும். அதற்கு ஆவண ஆதாரம் வேண்டும்.

தமிழ்நாட்டில் முன்னாள் அமைச்சர் ஒருவரைக் கைது செய்து, தற்போது வரை ஜாமீனில் விடாமல் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீதித்துறைதான் இந்த அடங்காப்பிடாரியான அமலாக்கத்துறையைக் கட்டுப்படுத்த வேண்டும். யூதர்களை சட்டப்படிதான் நாசிச ஜெர்மனி கொலை செய்தார்கள், இயேசுவைச் சிலுவையில் சாத்தியது கூட அன்றை ரோமானியர் சட்டப்படிதான், ஆகையால் சட்டப்படி நடக்கிறது என்பதற்காக அது தர்மப்படி நடக்கிறது என்ற அர்த்தம் கிடையாது. அமலாக்கத்துறை வழக்குகளுக்கு எல்லாம் கைது தேவையே கிடையாது.

மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் ஆண்டுக்கணக்கில் சிறையில் உள்ளனர். அதற்கான டிரையல் இன்னும் துவங்கக்கூடவில்லை. இதெல்லாம் எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காகத் தான் நடக்கிறது. ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைப்பவர்களுடன் எந்த சோதனையும் நடப்பதில்லை. அதேபோல பல வழக்கு இருந்தால் அனைத்தையும் மூடி மறைத்து விடுகின்றனர்.

மக்கள் இந்த சர்வாதிகார போக்கைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்குச் சரியான முடிவு கட்டுவார்கள். உச்ச நீதிமன்றம் தலையில் கொட்டுவதற்கு முன்னர் ஆளுநர் அமைச்சர் பொன்முடிக்குப் பதவிப்பிரமாணம் செய்திருக்க வேண்டும். ஜனாதிபதி ஆளுநர் ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், ஆ.ராசா மற்றும் கனிமொழி 2ஜி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. தேர்தலையொட்டி மீண்டும் தூசிதட்டி விசாரணைக்கு எடுத்துள்ளனர். ஆனால் எப்படி கீழமை நீதிமன்றத்தில் வெற்றி பெற்றார்களோ, அதேபோல உயர்நீதிமன்றத்திலும் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்பது மு.க.ஸ்டாலினின் வெற்றிகரமான திட்டம். இத்திட்டம் சொட்டுநீர் பாசனம் போல, நேரடியாக வேருக்குச் செல்கிறது. மேலும் தமிழ்நாடு அரசுக்குக் கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு கொடுத்தால் இத்திட்டங்களை முதலமைச்சர் விரிவுபடுத்துவார். திமுக தேர்தல் அறிக்கையை அப்படியே அதிமுக காப்பி எடுத்து அதன் மூலம் மறைமுகமாக திமுகவைப் பாராட்டுகிறது. இதற்காக அதிமுகவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் அதில் திமுகவின் பங்கு அதிகமாக இருக்கும். தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை இருவரும் இதுவரை ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற்றது கிடையாது. அவர்களை ஊடகங்கள் தான் பூதக்கண்ணாடி வைத்து பிரச்சாரம் செய்கிறது. இந்தியா கூட்டணி பார்ட்டி லவ் (40 - 0) என்ற செட் கணத்தில் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் தான் எம்பியாக டெல்லிக்குச் செல்வார்கள். மற்றவர்கள் வீட்டுக்குச் செல்வார்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "செய்வதெல்லாம் செய்துவிட்டு பிரதமர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்" - திருச்சியில் மு.க.ஸ்டாலின் பரப்புரை! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.