சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அண்ணா அறிவாலயத்தில் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளின் திமுக நாடாளுமன்றத்தின் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கனிமொழி கருணாநிதி, திமுக மக்களவைக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு, திமுக மக்களவைக் குழுத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தயாநிதி மாறன், மாநிலங்களவை கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், மக்களவை - மாநிலங்களவை ஆகிய இரு அவைகளின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெகத்ரட்சகன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனையடுத்து நாடாளுமன்ற குழுத் தலைவராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் போது, "தன்னை நாடாளுமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுத்த திமுக தலைவரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தன்னுடைய கொள்கைகளை திமுக எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்காது. 10 ஆண்டு காலமாக பாஜகவின் பல மசோதாக்களை எதிர்த்து இருக்கிறோம். தொடர்ந்து, சிறுபான்மையின மக்களை, இந்த நாட்டை, அரசியல் சாசனத்தை, சட்டத்தை, சமூக நீதியை காக்கக்கூடிய வகையில் திமுகவின் செயல்பாடுகள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில், திமுக தேர்தலின் போது அளித்த வாக்குறுதிக்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தில் எடுக்கப்படும் என்ற கேள்விக்கு? நீட் தேர்வுக்கு தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றோம். இந்தியா முழுவதும் எத்தனை மாணவர்கள் நீட் தேர்வால் பாதிப்படைகிறார்கள் என்பதை இப்போது கண்கூடாக பார்க்கிறோம். நீட் தேர்வுக்கு எதிராக திமுக தொடர்ந்து செயல்படும். கல்விக்கடன் ரத்து குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், ஆட்சி பொறுப்புக்கு வந்து விட்டால் மாற்றங்கள் வராது என்பதும் நிச்சயம் இல்லை என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு ஊழியர்கள் கவனத்திற்கு.. இனி கட்டண படுக்கை வார்டுகளில் சிகிச்சை வசதி! - New Health Insurance Scheme