ETV Bharat / state

திருவாரூரில் சொத்து தகராறில் மாமியாரைத் தாக்கிய மருமகன்.. கோமாவில் இருந்தவர் உயிரிழப்பு! - மாமியாரைத் தாக்கிய மருமகன்

Mother in law Murder: சொத்து தகராறில் மாமியாரைத் தாக்கிய மருமகன் குடும்பத்துடன் தலைமறைவாக உள்ள நிலையில், கோமாவில் இருந்த மாமியார் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mother-in-law killed in property dispute
சொத்து தகராறில் மாமியார் உயிரிழப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 3, 2024, 3:38 PM IST

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்கு உட்பட்ட திருப்பள்ளி முக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயபாரதி. இவரது கணவர் சேகர் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டுச் சென்ற நிலையில், வீடு திரும்பாததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, விஜயபாரதி தனது இரு மகள்களுடன் திருப்பள்ளி முக்கூடலில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், மூத்த மகள் புவனா கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருவாரூர் அருகே உள்ள பள்ளிவாரமங்களம் பகுதியைச் சேர்ந்த ரித்திஷ் என்பவரைக் காதல் திருமணம் செய்துள்ளார். விஜயபாரதியின் இரண்டாவது மகள் கல்பனா, சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ரித்தீஷ் - புவனா தம்பதியினர் கடந்த மூன்று வருடமாக விஜயபாரதி வீட்டில் தான் வசித்து வருகின்றனர்.

ரித்தீஷ் தினமும் கூலி வேலைக்குச் சென்ற நிலையில், குடித்துவிட்டு வீட்டில் தினமும் தகராறு செய்வது வழக்கமான ஒன்றாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி இரவு, கணவன் மனைவிக்கு இடையே சொத்து பிரச்சனை காரணமாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், மாமியாரை மூங்கில் கட்டையால் குடிபோதையில் இருந்த ரித்திஷ் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, மாமியார் விஜயபாரதியை இழுத்துச் சென்ற ரித்தீஷ், வீட்டிற்கு அருகில் இருந்த புளிய மரத்தில் மோதியுள்ளார். இதில் விஜயபாரதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, பக்கவாதம் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, அவர் சுய நினைவை இழந்துள்ளார். ஆனால், இதனை மறைத்து மகள் புவனா அடுத்த நாள் காலை 108 ஆம்புலன்ஸ் மூலம் விஜயபாரதியை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இந்த தகவல் அறிந்து, பிப்ரவரி 20ஆம் தேதி சென்னையில் இருந்து வந்த இரண்டாவது மகள் கல்பனா, தனது அம்மாவை அக்காவின் கணவர் தாக்கி விட்டதாக, நன்னிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து ரித்தீஷ், குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளார்.

இந்த நிலையில், 13 நாட்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த விஜயபாரதி, இன்று (மார்ச்.03) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் தற்போது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கட்சி பெயர், கொடியை பயன்படுத்த தடை கோரிய வழக்கு; தமிமுன் அன்சாரி பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.