ETV Bharat / state

துபாய் சென்ற தாய்.. மீண்டும் குழந்தையைக் கேட்டபோது தர மறுத்த உறவினர்கள்.. நெல்லையில் நடந்தது என்ன? - Mother dharna to rescue child - MOTHER DHARNA TO RESCUE CHILD

Mother dharna protest to rescue the child: திருநெல்வேலியில் குழந்தையை மீட்டுத் தரக்கோரி குழந்தையின் தாயார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தர்ணாவில் ஈடுபட்ட தாய் பிரவீனா
தர்ணாவில் ஈடுபட்ட தாய் பிரவீனா (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2024, 5:47 PM IST

திருநெல்வேலி: வெளிநாடு செல்வதற்காக குழந்தையை உறவினரிடம் ஒப்படைத்து விட்டுச் சென்ற நிலையில், திரும்பி குழந்தையை கேட்கும்பொழுது உறவினர்கள் குழந்தையை தர மறுப்பு தெரிவித்ததால், குழந்தையின் தாயர் உறவினரது வீட்டின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சென்னையைச் சேர்ந்தவர் பிரவீனா (36). இவரது கணவர் குணசீலன். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தை உள்ள நிலையில், பிரவீனா கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையில், வேலைக்காக துபாய் சென்ற பிரவீனா, அங்கு பணியாற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த குருநாதன் என்பவரை கடந்த 2019ஆம் ஆண்டு துபாயில் திருமணம் செய்துள்ளார்.

இதனையடுத்து, கரோனா காலத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டைக்கு குருநாதன் பிரவீனாவை அழைத்து வந்துள்ளார். இவர்களுக்கு 2020ல் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதனைத் தொடந்து, விசா புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் குழந்தையை துபாய்க்கு அழைத்துச் செல்வதில் தம்பதிக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, குருநாதரின் உறவினரான சங்கர், கவிதா மற்றும் சுரேஷ் ஆகியோரிடம் குழந்தையைப் பராமரித்துக் கொள்ளுமாறு ஒப்படைத்துவிட்டு இருவரும் துபாய் சென்றுள்ளனர்.

தொடர்ந்து, குழந்தையைப் பராமரிப்பதற்கு மாதந்தோறும் ஆன்லைன் மூலமாக பணம் அனுப்பியுள்ளனர். இதனையடுத்து, ஆறு மாதத்திற்குப் பிறகு திருநெல்வேலி வந்து பிரவீனா, சங்கர் - கவிதாவிடம் குழந்தையைக் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் பல்வேறு காரணங்களைக் காட்டி குழந்தையைத் தர மறுத்துள்ளனர். இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக முதலமைச்சர், தனிப்பிரிவு டிஐஜி மற்றும் எஸ்பி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், தனது குழந்தையை மீட்டு தரக்கோரி, குழந்தை தற்போது வைத்துள்ள திருநெல்வேலி சாந்தி நகர் 28வது தெருவில் உள்ள கவிதா- சங்கர் வீட்டு வாசலில் அமர்ந்து பிரவீனா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை போலீசார், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பிரவீனாவை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், குழந்தையைக் கேட்கும் போது குழந்தையை தர மறுப்பதாகவும், இரண்டாவது கணவர் குருநாதன் குழந்தை விற்பனை செய்து விட்டதாகவும் எதிர் தரப்பினர் மிரட்டுவதாக குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு; முன்னாள் பிரதமர் நம்பிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.