ETV Bharat / state

பெண் குழந்தைகளை ஆதரவற்றோர் விடுதியின் முன் விட்டு சென்ற தாய்; வெளியான சிசிடிவி தரவுகள்! - TWO GIRL CHILD ISSUE IN TIRUPATHUR

வாணியம்பாடியில் இரு பெண் குழந்தைகளை ஆதரவற்றோர் விடுதியின் முன்பு பெற்ற தாயே விட்டுச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையுடன்  திருப்பத்தூர் நகர போலீசார்
குழந்தையுடன் திருப்பத்தூர் நகர போலீசார் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2025, 7:17 PM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே இரு பெண் குழந்தைகளை ஆதரவற்றோர் விடுதியின் முன்பு இரவோடு இரவாக பெற்ற தாய் விட்டுச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது இரண்டு பெண் குழந்தைகளையும் மீட்டு அவர்களது தந்தையிடம் ஒப்படைத்துள்ளனர்.

விசராணையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பெருமாள்பேட்டை பகுதியில் கருணை இல்லம் ஆதரவற்றோர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று (ஜனவரி 03) வெள்ளிக்கிழமை நள்ளிரவு, கருணை இல்லம் விடுதியின் முன்பு குழந்தைகள் அழுகை சத்தம் கேட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்த போது, இரு பெண் குழந்தைகள் அழுது கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர போலீசார் இரண்டு பெண் குழந்தைகளையும் மீட்டு, தற்காலிகமாக கருணை இல்ல நிர்வாகி டேவிட் சுபாஷிடம் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து, பெண் குழந்தைகளை விட்டு சென்றது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆதரவற்றோர் விடுதியில் விசாரணை நடத்தும்  போலீசார்
ஆதரவற்றோர் விடுதியில் விசாரணை நடத்தும் போலீசார் (ETV Bharat Tamil Nadu)

இதில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்துள்ளனர். இதில், ஒரு நபர், இரண்டு பெண் குழந்தைகளை கருணை இல்லம் முன்பாக விட்டு சென்றதும், சற்று தூரத்தில் ஒரு பெண் நின்று கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் பெண் நின்று கொண்டிருந்த இடத்தில் ஆய்வு செய்த போது, அப்பகுதியில் இருந்து ஒரு கைப்பையை கைப்பற்றியுள்ளனர்.

இதையும் படிங்க: "உள்ளாடை ஏன் நனையவில்லை?" - விழுப்புரம் சிறுமி மரணத்தில் எழுப்பப்படும் கேள்விகள்!

அதனைத்தொடர்ந்து, அந்த பையில் இருந்த தொலைபேசி எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டுள்ளனர். இதில், அந்த தொலைப்பேசி எண் இரண்டு பெண் குழந்தைகளின் பாட்டியுடையது என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து போலீசார் பெண் குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் குழந்தைகளின் தந்தை, ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்த ராஜேஷ்(33) மற்றும் அவரது உறவினர் காவல் நிலையத்திற்கு விரைந்து வந்துள்ளனர். இதில், பெண் குழந்தைகளின் தந்தை ராஜேஷிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

வெளியான கண்காணிப்புக் கேமரா பதிவு (ETV Bharat Tamil Nadu)

விசாரணையில், கடந்த ஜனவரி இரண்டாம் தேதி மதியம் முதல் தன்னுடைய மணைவி ஜோதி (23) மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை காணவில்லை என்பதும், எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை என்றும் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதனால், தனது இரண்டு குழந்தைகளை, அவர்களது தாயே கருணை இல்லம் முன்பாக விட்டு சென்றிருக்கலாம் என்று குழந்தைகளின் தந்தை காவல்துறையினரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, இரண்டு மற்றும் ஒரு வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளையும் போலீசார் அவர்களது தந்தையிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, குழந்தைகளை கருணை இல்லம் முன்பாக விட்டுச்சென்ற நபரையும், குழந்தைகளின் தாயையும் தேடி வருகின்றனர். இந்த நிலையில், இரண்டு பெண் குழந்தைகளையும் கருணை இல்லம் முன்பாக விட்டுச்செல்வது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.