ETV Bharat / state

தொடர் விடுமுறை: ஆழியார் கவியருவிக்கு படையெடுக்கும் மக்கள்.. வனத்துறை கொடுத்த வார்னிங்? - KAVIYARUVI WATERFALLS

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பூங்கா கவியருவி பகுதிக்கு கடந்த மூன்று நாட்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பணிகள் வருகை தந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆழியார் கவியருவி
ஆழியார் கவியருவியில் மக்கள் குளிக்கும் காட்சி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2025, 11:18 AM IST

கோயம்புத்தூர்: தொடர் விடுமுறையை முன்னிட்டு, ஆழியார் பூங்கா கவியருவி பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். இந்த நிலையில், வால்பாறை செல்லும் சாலை ஓரத்தில் வானத்தை நிறுத்தக் கூடாது எனவும், விலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பூங்கா மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட கவியருவி. இந்த கவியருவிக்கு சென்னை, திருப்பூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம்.

அந்த வகையில், பொங்கல் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆழியார் அணை, பூங்கா கவியருவிக்கு வருகை தருகின்றனர். அந்த வகையில், கடந்த மூன்று நாட்களாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஆழியார் கவியருவியில் உற்சாகமாக குளிக்கும் குழந்தைகள்
ஆழியார் கவியருவியில் உற்சாகமாக குளிக்கும் குழந்தைகள் (ETV Bharat Tamil Nadu)

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், வனத்துறை அதிகாரிகள் உத்தரவின் பெயரில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்று வருகின்றனர். தற்போது, தமிழ்நாடு அரசு அறிவித்த பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் விதமாக மஞ்சள் பை திட்டம் இப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. அதனால் சுற்றுலாப் பயணிகள் வரும் வாகனங்களில் மது பாட்டில்கள் போதை வஸ்துக்கள் உள்ளதா எனவும் சோதனை செய்யப்படுகிறது.

ஆனைமலை புலிகள் காப்பகம்
ஆனைமலை புலிகள் காப்பகம் (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: காசி தமிழ் சங்கமம் 2025: ஏற்பாடுகள் தீவிரம் - விண்ணப்பிப்பது எப்படி?

குறிப்பாக, தற்போது பனிக்காலம் என்பதால் சாலை ஓரம் உள்ள செடிகள் காய்ந்த நிலையில் உள்ளன. ஆதலால் தீப்பெட்டி, சிசர் லைட் உள்ளிட்ட எளிதில் பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு காட்டு யானைகள் வராமல் இருக்கவும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும், வால்பாறை செல்லும் சுற்றுலாப் பயணிகள் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும், விலங்குகளைக் கண்டால் புகைப்படம் எடுப்பது, அருகில் செல்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் எனவும், அதை மீறுவது தெரியவந்தால் வனத்துறை சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.