ETV Bharat / state

கணவருக்கு சேலை கட்டிவிடும் விடும் நூதன போட்டி: நெல்லை மக்களின் அட்ராசிட்டி! - SAREE WEARING COMPETITION

நெல்லையில் பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு, கணவர்களுக்கு மனைவிகள் சேலை கட்டி விடும் நூதன விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

கணவருக்கு சேலை கட்டிவிடும் விடும் நூதன போட்டி
கணவருக்கு சேலை கட்டிவிடும் விடும் நூதன போட்டி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2025, 3:11 PM IST

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் பொங்கல் கொண்டாட்டம் கடந்த 4 நாட்களாக வெகுவிமரிசையாக நடைபெற்றது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. பொதுவாக கிராமப்புறங்களில் பொங்கல் விளையாட்டுப் போட்டி என்றாலே, விளையாட்டு வெறும் போட்டியாக மட்டுமல்லாமல் கலகலப்பான நகைச்சுவை கலந்த விளையாட்டாக இருக்கும். அப்படி தான் நெல்லை மாவட்டத்தில் ஒரு போட்டி நடந்து முடிந்துள்ளது. அது என்ன?

அதாவது, வித்தியாசமான முறையில் எதார்த்தமான விளையாட்டுகளை கிராமப்புறங்களில் நடத்துவார்கள். அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் பகுதியில் மிகவும் வித்தியாசமான முறையில் விளையாட்டுப் போட்டி நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், பெண்கள் இளவட்டக்கல் தூக்கி சாதனை படைப்பது, கணவன் மனைவி வாயால் பந்தைக் கடித்துக் கொண்டு செல்வது என வித்தியாசமான போட்டிகள் நடந்து வருகிறது.

அந்த வரிசையில் நேற்று இரவு தெற்கு வள்ளியூர் அருகே கணவர்களுக்கு மனைவிமார்கள் சேலை கட்டி விடும் நூதன போட்டி நடைபெற்றது. தெற்கு வள்ளியூர் அம்மச்சி கோயிலில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டியில், தங்களின் கணவர்களுக்கு அவரவர் மனைவிகள் சேலை கட்டி அழகு பார்க்கும் அழகிய போட்டி நடந்தது. இதில் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு போட்டியைக் கண்டு ரசித்தனர்.

சேலை கட்டிவிடும் விடும் போட்டியில் வெற்றி பெற்ற தம்பதி
சேலை கட்டிவிடும் விடும் போட்டியில் வெற்றி பெற்ற தம்பதி (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: அப்படி போடு.. காணும் பொங்கலை கலகலப்பாக்கிய கிராமம்.. கணவன் மனைவியை தூக்கி செல்லும் போட்டி!

மேலும், வெற்றி பெற்ற ஜோடி குத்தாட்டம் போட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது அனைவரையும் குத்தாட்டம் போட வைத்தது. அதாவது, விளையாட்டு விதிமுறைகளின் படி, தங்களின் கணவனுக்கு மனைவி சேலையைக் கட்டிவிட வேண்டும்.

கணவருக்கு சேலை கட்டிவிடும் விடும் நூதன போட்டி (ETV Bharat Tamil Nadu)

அதுவும் ஒரு நிமிடத்திற்குள் அழகாகக் கட்ட வேண்டும் என்பது போட்டியின் விதி. அதன்படி, போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கணவன் மனைவி குத்தாட்டம் போட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அது, அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்தது. பின்னர் கணவருக்கு மனைவி சேலை கட்டி விடும் போட்டியில் வெற்றி பெற்ற ஜோடிக்கு நடுவர் மூலம் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை அப்பகுதி மக்களே செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.