ETV Bharat / state

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது! - Thoothukudi

Gambling: சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து செல்போன்கள், ரொக்கப் பணம், சீட்டுக்கட்டுகள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

11 people arrested for gambling with tickets
சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 1:23 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், நேற்று (பிப்.6) குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ரெகுராஜன் தலைமையில், உதவி ஆய்வாளர் முருகன் உள்ளிட்ட போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கூடல்நகர் அருகே உள்ள காட்டுப் பகுதியில் வைத்து நாகர்கோவில், வெள்ளமடம் பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி மகன் பொன்ராஜ் (45), கொம்பன்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துகருப்பன் மகன் அம்மா முத்து (52), வட்டன்விளை பகுதியைச் சேர்ந்த சின்னதுரை மகன் நாராயணன் (60), சாத்தான்குளத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் தளவாய்(56),

மேலும், திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர்களான லிங்கபாண்டி மகன் பாக்கியசீலன் (54), பூசதுரை மகன் ராஜேஷ் (42), பேட்டைகுளம் பகுதியைச் சேர்ந்த அபூபக்கர் மகன் ரபீக் அலி (53), ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் மகன் இசக்கிபாண்டி (35), காளான் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஷேக் முகமது மகன் புகாரி (65), ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மகன் செல்வபாபு (32) மற்றும் படுக்கபத்து மறக்குடி பகுதியைச் சேர்ந்த முத்தையா மகன் வீரபாண்டி (44) ஆகிய 11 பேரும் இணைந்து பணத்திற்காக சீட்டு வைத்து, சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட 11 பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 1 லட்சத்து 46 ஆயிரத்து 370 ரூபாய் ரொக்கப் பணம், 10 செல்போன்கள், 6 இருசக்கர வாகனங்கள் மற்றும் சீட்டுக்கட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த குலசேகரன்பட்டினம் காவல் துறையினர், 11 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஸ்பெயின் பயணம் மூலம் தமிழகத்திற்கான முதலீடு?, விஜய் அரசியல் வருகை குறித்து முதலமைச்சர் பதில்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.