ETV Bharat / state

மூவேந்தர் முன்னேற்ற கழக நிர்வாகி கில்லி பிரகாஷ் சிறையில் தற்கொலை முயற்சி! - prisoner suicide attempt - PRISONER SUICIDE ATTEMPT

prisoner suicide attempt: மயிலாடுதுறையில் பொதுப்பணித்துறை அதிகாரியை ஆபாச வீடியோவை காட்டி பணம் பறித்த வழக்கில் கைதாகி கிளைசிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் கில்லி பிரகாஷ் சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு

கைதான கில்லி பிரகாஷ்
கைதான கில்லி பிரகாஷ் (Credit - Etv Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 18, 2024, 4:10 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறையைச் சேர்ந்த மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் கில்லி பிரகாஷ் (40). இவர் காரைக்காலில் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன் மயிலாடுதுறை சேர்ந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோவை காட்டி மிரட்டியுள்ளார்.

மேலும், அந்த வீடியோவை லீக் செய்யாமல் இருக்க 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு வெங்கடேசனுக்கு தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் கில்லி பிரகாஷ் கடந்த மே மாதம் 21ஆம் தேதி மயிலாடுதுறை போலீசாரால் கைது செய்யப்பட்டு மயிலாடுதுறை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், இந்த வழக்கில் கில்லி பிரகாஷின் கூட்டாளிகளான முகமது நசீர் (39), தினேஷ் பாபு (31) ஆகியோரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தற்கொலை தடுப்பு உதவி எண்
தற்கொலை தடுப்பு உதவி எண் (Credits - ETV Bharat Tamil Nadu)

கில்லி பிரகாஷ் மீது ஏற்கனவே கொலை, அடிதடி, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கில்லி பிரகாஷை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், கில்லி பிரகாஷ் இன்று அதிகாலை சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உடனடியாக சிறைத்துறை போலீசார் கில்லி பிரகாஷை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது, கில்லி பிரகாஷை பார்க்க வந்த அவரது சகோதரர் முரளியை போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும், கில்லி பிரகாஷ் தற்கொலை முயற்சிக்கு போலீசார் தான் காரணம் என குற்றம் சாட்டிய சகோதரர் தான் எடுத்து வந்திருந்த மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றி காவல்துறையினருக்கு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கிருந்த போலீசார் முரளியின் தலையில் தண்ணீர் ஊற்றி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று முதல் 800 ஆம்னிப் பேருந்துகளுக்கு தடை.. வேறு மாநில பதிவெண் பேருந்துகளில் புக்கிங் செய்ய வேண்டாம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.