ETV Bharat / state

50 லட்சம் வழிப்பறி; கொள்ளை கும்பலை வலைவீசி தேடும் சென்னை போலீஸ்! - hawala money theft

money theft: சென்னையில் 50 லட்சம் பணத்தை எடுத்துச் சென்ற நபரை வழிமறித்து கடுமையாக தாக்கிய சம்பவத்தில், சிசிடிவி காட்சிகளை கைபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையம்
சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 9:27 PM IST

சென்னை: சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் நவாஸ் கான். இவர் மண்ணடி அடுத்த ஈவினிங் பஜார் பகுதியில் உள்ள செல்போன் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்றிரவு (சனிக்கிழமை) இரவு நவாஸ் கான் தனது பைக்கில் 50 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை எடுத்துக் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது, மண்ணடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 5 பேர் வழிமறித்து நவாஸ் கானை தலை, கையில் வெட்டிவிட்டு, பணத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து, தகவல் அறிந்த வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகளை கைபற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து, நவாஸ் கான் இது தொடர்பாக வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் உண்மை தன்மை குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: திருப்பத்தூரில் சாதிய தாக்குதல்; மகளிடம் பேசியதால் மாற்று சமூக இளைஞரை சரமாரியாக தாக்கிய தந்தை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.