சென்னை: இயக்குநர் மோகன் ஜி யை சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறான கருத்து தெரிவித்ததால் அவர் கைது செய்யப்பட்டதாகவும், திருச்சி அழைத்து வரப்படுவார் எனவும் மாவட்ட எஸ்.பி. வருண் குமார் கூறியுள்ளார்.
திருச்சி மாவட்ட காவல்துறை அளித்துள்ள பத்திரிகை வெளியீட்டில் (C.No. 14/SB/Press/TRI/2024), சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை மேலாளராக பணியாற்றி வரும் கவியரசு என்பவர் அளித்த புகாரின் பேரில் மோகன் ஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனியார் யூடியூப் பக்கத்தில் மோகன் ஜி யின் பேட்டி இந்துக்கள் என்ன இளிச்சவாயர்களா? என்ற தலைப்பில் வெளியிடப்பட்டதாகவும், அந்த வீடியோவில் மோகன் ஜி பேசியது மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும் , இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
Trichy District Cybercrime Police arrested Tamil Film Director Mohan. G for allegedly making derogatory remarks on Panchamirtham (Prasadam). He was arrested in Chennai this morning and will brought to Trichy: Trichy District SP Varun Kumar
— ANI (@ANI) September 24, 2024
இந்த வீடியோவில் பழனி கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மைக்குறைவு ஏற்படுத்தும் மாத்திரை பயன்படுத்துவதாக உண்மைக்கு புறம்பாக மோகன் ஜி பேசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏற்கெனவே திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாத லட்டுவில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் இருப்பதாக கூறப்படும் நிலையில், தமிழ்நாட்டில் இவ்வாறு தகவலை பரப்புவது கலவரத்தை தூண்டும் செயல் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சினிமா இயக்குனர் நண்பர் திரௌபதி மோகன் G @mohandreamer அவர்கள் சற்று முன் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
— Ashvathaman Allimuthu (@asuvathaman) September 24, 2024
என்ன காரணம், எந்த வழக்கு என்று எந்த முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்கு கூறப்படவில்லை. இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது. அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார்… pic.twitter.com/kpHp3Kmffa
இதுகுறித்து பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " திமுகவினுடைய ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர்கருத்து பேசுபவர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டதாக குறைகூறியுள்ள அவர், "கஞ்சா, கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இது மாதிரியான ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாக செய்கிறது" என பதிவிட்டுள்ளார்.
திரைப்பட இயக்குனர் மோகனை அரைகுறை புரிதலுடன் கைது செய்வதா?
— Dr S RAMADOSS (@drramadoss) September 24, 2024
உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோயில் ஒன்றின் பஞ்சாமிர்தம் குறித்து யு-டியூப் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு நேர்காணல் அளித்ததற்காக திரைப்பட இயக்குனர் ஜி.மோகன் கைது…
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திரைடப்பட இயக்குநர் மோகனை அரைகுறை புரிதலுடன் கைது செய்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மோகன் ஜி அளித்துள்ள நேர்காணலை பார்த்தவர்களுக்கு அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பது தெளிவாக புரியும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.
மோகன் ஜி தமது நேர்காணலில் , "புகழ்பெற்ற கோயிலில் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தத்தில் ஆண்மைக்குறைவு மருந்து கலக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த பஞ்சாமிர்தம் தரமற்றது எனக்கூறி அழிக்கப்பட்டதாகவும் செவிவழியாக கேள்விப்பட்டேன். ஆனால் என்னிடம் எந்த ஆதாரமும் இல்லாததால் நான் செய்தியாளர் சந்திப்பைக் கூட்டி பேசவில்லை" என்று தான் மோகன் கூறியிருக்கிறார்.
இயக்குநர் மோகன் கூறியதில் எந்த தவறும் இல்லை என கூறும் ராமதாஸ், பொதுநலன் கருதி கூறியதை முழுமையாக புரிந்து கொள்ளாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக வார்த்தைகளை புரிந்து கொண்டு மோகனை கைது செய்திருப்பது அநீதி, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
சமீபத்தில் திருப்பதி பிரசாதமான லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்படுவதாக வந்த தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சையைத் தொடர்ந்து திருப்பதி லட்டுவிற்கு நெய் விநியோகம் செய்த ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தை தொடர்புப்படுத்தி பலரும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகர் பழனி தண்டாயுதபாணி கோயிலின் அறங்காவலர் குழுவில் இருப்பதை சுட்டிக்காட்டியும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதையும் படிங்க: த்ரிஷா வீட்டில் மதில்சுவர் தகராறு.. பக்கத்து வீட்டாருடன் சமரசம்! - trisha neighbour high court case