ETV Bharat / state

கச்சத்தீவு விவகாரத்தில் மோடி ஹீரோ இல்லை, ஜீரோ தான் - திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி பேச்சு! - DK President Veeramani - DK PRESIDENT VEERAMANI

K.Veeramani about Kachchatheevu issue: கச்சத்தீவு விவகாரத்தில் மோடி ஹீரோ இல்லை எனவும், அவர் ஜீரோவாகவே உள்ளார் என்றும் கூறியதோடு, பாஜக தமிழகத்தில் வழக்கம்போல நோட்டாவுடன் மட்டுமே போட்டியிடுவதாக திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி கூறியுள்ளார்.

திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி பேச்சு
கச்சத்தீவு விவகாரத்தில் மோடி ஹீரோ இல்லை, ஜீரோ தான்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 5:02 PM IST

கச்சத்தீவு விவகாரத்தில் மோடி ஹீரோ இல்லை, ஜீரோ தான்

தென்காசி: தழிழகத்தில் வழக்கம்போல பாஜக நோட்டாவுடன் போட்டி போடும் சூழலே உருவாகியுள்ளதாக இன்று (ஏப்.02) செய்தியாளர்களை சந்தித்த திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி விமரிசித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள், பல்வேறு கட்ட பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தென்காசி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த திராவிட கழக தலைவர் கீ.வீரமணி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைந்தால், ஜனநாயகத்தின் கடைசி தேர்தலாக இது அமையும்.

பாஜகவிற்கு எதிராக தேர்தல் பத்திர முறைகேடு குறித்த பிரச்சனைகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அதனை திசை திருப்பும் விதமாக பாஜக அரசு கச்சத்தீவு பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. இதனை சரிசெய்யும் விதமாக மோடி ஐந்தாறு முறை, தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளார், ஆனால் அவை எதுவும் இங்கு எடுபடவில்லை, எனவே திசை திருப்பும் வகையில் கச்சத்தீவு பிரச்சனை குறித்து அவர் பேசுகிறார். கச்சத்தீவு குறித்து குற்றம் சாட்ட மோடிக்கு எந்த வித தார்மீக உரிமையும் கிடையாது.

கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் மோடி ஹீரோவாக இல்லை, ஜீரோவாக உள்ளார். அந்த வகையில் பொய் நெல்லை குத்தி பொங்கல் வைக்கும் வேலை இது. கச்சத்தீவு விவகாரத்தில் அண்ணாமலை வெளியிடும் ஆதாரங்கள் அனைத்தும் ஆதாரங்கள் இல்லை, அவை எல்லாம் தேவையற்ற கற்பனையான விசயங்கள், பொய் சாட்சிகள்.

தழிழகத்தில் வழக்கம்போல பாஜக நோட்டாவுடன் போட்டி போடும் சூழலே உள்ளது. அந்த வகையில் தமிழகத்திற்கு மோடி வரும்போதெல்லாம் யாரையும் கொள்ளையடிக்க விட மாட்டேன் என பிரச்சாரம் செய்து வருகிறார், அது அவ்வாறு இல்லை, எங்களைத் தவிர யாரையும் கொள்ளையடிக்க விட மாட்டேன் என்பதே", என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் பண்பாடு அழிந்துவிடும்" - வாகை சந்திரசேகர் விமர்சனம்! - Vagai Chandrasekhar Campaign

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.