ETV Bharat / state

திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலில் நேரில் பிறந்தநாள் வாழ்த்து! - Arcot Veerasamy - ARCOT VEERASAMY

MK Stalin wishes Arcot Veerasamy: முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

CM Stalin birthday wishes for Arcot Veerasamy

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 3:27 PM IST

சென்னை: முன்னாள் அமைச்சரும், திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான ஆற்காடு நா.வீராசாமியின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அண்ணா நகரில் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, டி.ஆர்.பி.ராஜா, ஆர்.காந்தி, திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா உட்பட திமுகவினர் பலர் இருந்தனர். இந்நிலையில், ஆற்காடு நா.வீராசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில் ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், "கருணாநிதியின் நிழலாக இருந்தவர் ஆற்காட்டார். உடல்நலன் பாதிக்கப்படுவதற்கு முன்புவரை கட்சிப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். எனது வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் உடனிருந்து வழிநடத்திய பண்பாளர். மரியாதைக்குரிய ஆற்காட்டாருக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த கோயில்.. பவானிசாகர் அணையில் பதுங்கியிருக்கும் மர்மம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.