ETV Bharat / state

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் - மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்..! - கீழக்கரை ஜல்லிக்கட்டு நியூஸ்

Madurai Keezhakkarai Jallikattu Stadium: அலங்காநல்லூர் அருகே கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

Madurai Keezhakkarai Jallikattu Stadium
மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2024, 8:55 AM IST

Updated : Jan 24, 2024, 10:15 AM IST

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்

மதுரை: திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அலங்காநல்லூரில் பிரம்மாண்ட ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணையை 2023, பிப்ரவரி 3ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரூ.62 கோடி 77 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச் 18ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.

ஒரே நேரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அமரும் வசதிகளுடன் மூன்றடுக்குப் பார்வையாளர் மாடம், ஏறுதழுவுதல் நடைபெறும் இடம், மிக முக்கிய விருந்தினர்கள் அமரும் இடம், ஏறுதழுவுதலில் பங்குபெறும் காளைகளின் எழுச்சி வடிவங்களைப் புலப்படுத்தும் அருங்காட்சியகம், ஒலி-ஒளி காட்சிக்கூடம், கால்நடை மருந்தகம், நூலகம், மாடுபிடி வீரர்களுக்கான தங்கும் அறைகள் என அனைத்தையும் உள்ளடக்கி 83 ஆயிரத்து 462 சதுரடி பரப்பளவில் இந்த அரங்கம் கட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் புதிய ஏறுதழுவுதல் அரங்கம் தமிழ்நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும் எனக் கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுடன் மாவட்ட நிர்வாகம் மற்றும் விளையாட்டுத் துறையின் வழக்கமான போட்டிகளை நடத்துவதற்கும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டிகள் எதுவும் நடைபெறாத காலங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வரங்கத்திற்கு "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்" (Madurai Keezhakkarai Jallikattu) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த அரங்கத்திற்கு சங்க கால மன்னரான 'பாண்டியன் நெடுஞ்செழியன்' பெயரைச் சூட்ட வேண்டும் என பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், இன்று (ஜன.24) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஏர்தழுவும் அரங்கத்தை திறந்து வைக்க உள்ளார். அதனைத்தொடர்ந்து, அங்கு ஜல்லிக்கட்டு போட்டியும் நடைபெற உள்ளது. அதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.

ஏறுதழுவுதல் அரங்கத்திற்கான திறப்பு விழாவிற்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டி, காலை 11 மணியளவில் துவங்கி ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் என ஆறு சுற்றுகளாக, மாலை 5 மணி வரை நடைபெறலாம் மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காலையில் உரிமையாளருக்கு முதல் பரிசாக ரூபாய் 12 லட்சம் மதிப்புள்ள ஜீப் பரிசாக வழங்கப்பட உள்ளது. இரண்டாம் இடம் பெறும் காளை உரிமையாளர் மற்றும் மாடுபிடி வீரருக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்படுகிறது. இது தவிர, ரொக்கமாக முதல் பரிசுக்கு ரூபாய் ஒரு லட்சமும், இரண்டாவது பரிசுக்கு ரூபாய் 75 ஆயிரம் வழங்கப்படுகிறது.

மேலும், காயமடையும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலுதவி சிகிச்சை மையங்கள் வாயிலாக மருத்துவ உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கென சிறப்பு மருத்துவர் குழு மற்றும் கால்நடைத்துறை சார்பாகவும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேல் சிகிச்சை தேவைப்படும் நபர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "முழுவதுமாக கட்டி முடிக்கப்படாத கோயிலை, அவசர அவசரமாகத் திறந்தது பாஜகவின் தேர்தல் தந்திரம்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Last Updated : Jan 24, 2024, 10:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.