சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்து 2,984 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 10) அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்த தொடங்கியுள்ளார்.
இந்த நேர்காணலின்போது, தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிய உள்ளார். நேர்காணலில் விருப்பமனு தாக்கல் செய்தவர்கள், அந்தந்த நாடாளுமன்ற தொகுதி மாவட்ட செயலாளர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள வேண்டும். பரிந்துரையாளர்கள், ஆதரவாளர்களுக்கு அனுமதி இல்லை என திமுக தலைமை அறிவித்துள்ளது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 21 மக்களவை தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்நிலையில், வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் இன்று நடைபெறும் நிலையில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.
இந்த நேர்காணலில் முதலில் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்த வேட்பாளர்களுக்கு நேர்காணல் தொடங்கியுள்து.
இதையும் படிங்க: மாநிலங்களவைக்குச் செல்கிறார் கமல்ஹாசன் - மக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை!