ETV Bharat / state

மாணவர்களுக்கு ரூ.4 லட்சம் கடன்.. திருக்குறள் தேசிய நூல்.. திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 11:15 AM IST

MK Stalin release DMK Manifesto: 64 பக்கங்கள் கொண்ட திமுக தேர்தல் அறிக்கையின் முக்கியமான அம்சங்களை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடை பெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இதனிடையே, திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

64 பக்கங்கள் கொண்ட அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அவைகளில் சில முக்கியமானவை பின்வருமாறு:

  • இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத் தருவோம்
  • ஆளுநர்களை கிரிமினல் நடவடிக்கையில் இருந்து பாதுகாக்கும் சட்டம் 361 ரத்து செய்யப்படும்
  • சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படாது
  • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்
  • மாணவர்களுக்கு ரூ.4 லட்சம் வரை வட்டியில்லா கல்விக்கடன் வழங்கப்படும்
  • புதிய தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படாது
  • சிலிண்டர் விலை ரூ.500 ஆகக் குறைக்கப்படும்
  • பெட்ரோல் - ரூ,75 ஆகவும்; டீசல் ரூ.65 ஆகவும் விலை குறைக்கப்படும்
  • ரயில்வே கட்டண சலுகை மீண்டும் கொண்டுவரப்படும்
  • புதுச்சேரி மாநிலமாக்கப்படும்
  • ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ்மொழி கொண்டுவரப்படும்
  • 'திருக்குறள்' தேசிய நூலாக அறிவிக்கப்படும்
  • உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும்
  • தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் நீக்கப்படும்
  • குடியுரிமை சட்டம் நிறுத்தப்படும்
  • ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்
  • சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்படும்
  • சச்சார் கமிட்டியின் (Sachar Committee) பரிந்துரை செயல்படுத்தப்படும்

இதையும் படிங்க: திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஸ்டாலின் - தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.