தூத்துக்குடி: நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டிவரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியது.
இந்த நிலையில், ராமநாதபுரம் - தூத்துக்குடி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று மாலை சிந்தலக்கரையில் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில், நேற்று சென்னையிலிருந்து கிளம்பி விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த அவர் நெல்லை - கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நாங்குநேரியில் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர், இரவு தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கிய அவர், தூத்துக்குடி மாநகரில் உள்ள தமிழ்ச்சாலை ரோட்டில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது, 'வியாபாரிகளிடம் நன்றாக இருக்கிறீர்களா? வியாபாரம் எப்படி போய்க்கொண்டு இருக்கிறது' என்று முதலமைச்சர் கேட்க அதற்கு வியாபாரி 'நன்றாக இருக்கிறேன்.. வியாபாரம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று பதிலளித்தார். பின்னர், 'நீங்கள் நலமா' என்று வியாபாரி கேட்க, 'நான் நலமாக உள்ளேன்' என்றார்.
பின்னர் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வாங்க வந்த காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த மேரி என்ற மூதாட்டி, காய்கறி வாங்கும் போது ரூ.15,00 பணத்தைத் தவற விட்டேன் எனக் கூறி வருந்தினார். இதனையடுத்து, 'அதனை நான் தருகிறேன்' என்று கூறிய மு.க.ஸ்டாலின் உடனடியாக ரூ.15,00 பணத்தைக் கொடுத்து உதவி செய்துள்ளார்.
இதையும் படிங்க: விஜயதரணி அவசரப்பட்டு விட்டார், வேறு வாய்ப்பு கொடுக்கிறார்களா என பார்ப்போம் - கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் கருத்து! - Vijay Vasanth About Modi