ETV Bharat / state

“ஆளுநரைக் கூட எதிர்க்க முதுகெலும்பில்லாத எடப்பாடி பழனிசாமி” - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு! - MK Stalin virudhunagar campaign - MK STALIN VIRUDHUNAGAR CAMPAIGN

MK Stalin virudhunagar campaign: “ஆளுநர் ஆர்.என்.ரவியைக்கூட எதிர்க்க முதுகெலும்பு இல்லாத பழனிசாமி, தமிழ்நாட்டை மீட்கப் புறப்படுகிறேன் என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுநரைக் கூட எதிர்க்க முதுகெலும்பில்லாத எடப்பாடி பழனிசாமி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 10:48 PM IST

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கிருஷ்ணன்கோயிலில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில், தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோருக்கு வாக்கு கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அந்த உரையில், “காற்றிலேயே கம்பு சுற்றுபவர் பழனிசாமி. நடப்பது நாடாளுமன்றத் தேர்தல். பத்தாண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டை படுகுழியில் தள்ளியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. மண்புழு மாதிரி ஊர்ந்து பதவிக்கு வந்து, பதவி சுகத்திற்காக பச்சோந்தியாக மாறி, பா.ஜ.க.வுக்கு பார்ட்னராக இருந்து, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்த பழனிசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நடகம் நடத்துகிறாரே.

எங்கேயாவது, பா.ஜ.க.வையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை பேசுகிறாரா? பிரதமர் பற்றி மட்டுமல்ல, ஆளுநரைப் பற்றிகூட பேசுவதில்லை. இதை நாங்கள் கேட்ட உடனே இப்போது சொல்கிறார்!. “ஆளுநரால் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. பிறகு ஏன் நாங்கள் அவரைப் பற்றி பேச வேண்டும்?” என்று அறிவுக்கொழுந்து மாதிரி கேள்வி கேட்டிருக்கிறார்.

ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பேசும் பேச்சா இது? ஆளுநரால் இந்த தனிப்பட்ட ஸ்டாலினுக்கோ, தி.மு.க.விற்கோ எந்தப் பிரச்சினையும் இல்லை. அவருக்கும், எங்களுக்கும் என்ன வாய்க்கால் வரப்பு தகராறா? இல்லை, பாகப்பிரிவினை, பங்காளி சொத்து பிரச்சனையா? தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதைத் தடுக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களுக்கும், சட்ட முன்வடிவுகளுக்கும் அனுமதி அளிக்க மறுக்கிறார். இதுதான் எங்களுக்கும் அவருக்குமான பிரச்சனை.

மக்களால் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட சட்டங்களுக்கு அனுமதி தராமல் ஆளுநர் இழுத்தடிப்பது, தமிழ்நாடு சட்டமன்றத்தை இழிவுபடுத்துவது இல்லையா? முதலமைச்சரான எனக்கு எப்படி கோபம் வருகிறதோ, அதே கோபம் எதிர்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமிக்கு வர வேண்டாமா? ஆளுநர் இப்படி இழுத்தடிப்பது தவறு என்று ஆளுநரைக் கேட்டிருக்க வேண்டாமா? அப்படி கேட்க மறுக்கிறார் என்றால், ஒன்று ஆளுநரைப் பார்த்து பயப்படுகிறார் என்று அர்த்தம். இல்லை, பழனிசாமிக்குச் சொரணை இல்லை என்று அர்த்தம்.

நாங்கள் கேட்பது, பழனிசாமி அவர்களே, ஆளுநருக்கும், உங்களுக்கும் பிரச்சனை இருந்தால் மட்டும் வீரமாக அவரை எதிர்த்துப் பேசிவிடுவீர்களா? அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநராக இருந்தாரே பன்வாரிலால் புரோகித், அவர் ஏதோ மக்கள் பிரதிநிதி போல ஆய்வு செய்யச் சென்றார். அப்போது கூட அவருக்குப் பயந்து அமைதியாக கண்டுகொள்ளாமல் இருந்தவர் தான் நீங்கள். அப்போதுகூட, நாங்கள் தான் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டினோம். ஆட்சியில் இருப்பது மண்புழுவாக ஊர்ந்த பழனிசாமிதானே, நமக்கு என்ன? அப்படியென்று நாங்கள் இல்லை.

ஆளுநரின் நடவடிக்கை என்பது, மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமாக இருந்தால், எப்போதும் எந்தச் சூழலிலும் எதிர்க்கிறவர்கள் நாங்கள். ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரே கொள்கைதான். மனிதன் நிமிர்ந்து நடக்கக் காரணமே முதுகெலும்புதான், பொழுது விடிந்ததுமே தமிழ்நாட்டிற்கு எதிராக, தமிழர்களுக்கு எதிராக, தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிராக என்ன கருத்து சொல்லலாம் என்று எழுந்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியைக்கூட எதிர்க்க முதுகெலும்பு இல்லாத பழனிசாமி தமிழ்நாட்டை மீட்கப் புறப்படுகிறேன் என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா” என்றார்.

இதையும் படிங்க: தமிழ் வாசிக்க முடியாமல் திணறிய திருவள்ளூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்! - Tiruvallur NTK Candidate

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.