ETV Bharat / state

விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான 'மிஸ் கூவாகம்’ போட்டி இன்று மாலை நடைபெறுகிறது! - Miss Koovagam - MISS KOOVAGAM

Miss Koovagam Competition: விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான 'மிஸ் கூவாகம்’ போட்டி இன்று மாலை நடைபெற உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொள்கிறார்.

Miss Koovagam Competition
Miss Koovagam Competition
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 3:55 PM IST

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சி அருகே அமைந்துள்ள கூவாகம் கிராமத்தில் சித்திரைத் திருவிழா கடந்த 5ஆம் தேதி 'சாகை வார்த்தல்' நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 'சாமி கண் திறத்தல்' நிகழ்ச்சி வருகிற 23ஆம் தேதி நடக்கிறது.

இதில், திருநங்கைகள் கலந்துகொண்டு கோயில் பூசாரி கையினால் தாலி கட்டிக்கொள்வார்கள். மேலும், 24ஆம் தேதி அரவான் பலியிடும் நிகழ்ச்சியும், தாலி அறுத்தல் நிகழ்வு மற்றும் தேரோட்டமும் நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காகத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கூவாகம் கிராமத்திற்கு வருவர்.

இந்நிலையில், இன்று (ஏப்.21) மாலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தீவுத் திடலில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம், விழுப்புரம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, சென்னை திருநங்கை தலைவர்கள் (நாயக்குகள்) அமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து 'கூவாகம் திருவிழா' என்ற தலைப்பில், திருநங்கைகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக, திருநங்கைகளுக்கான நடனப் போட்டிகள் நடைபெற்றன. இதில், ஏராளமான திருநங்கைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு நடனமாடி அசத்தினர். அந்த வகையில், இன்று மாலை 'மிஸ் கூவாகம்' அழகிப் போட்டிக்கான தேர்வு நடைபெற இருக்கிறது.

இதில், சென்னை, சேலம், ஈரோடு, மதுரை, கோவை, திருச்சி, விழுப்புரம், நாமக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கைகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். மேலும், நடிகை அம்பிகா, பிரியா பவானி சங்கர், நடிகர் ஸ்ரீ காந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர். அதேபோல் சின்னதிரை நடிகை தீபா மற்றும் தொகுப்பாளர் தீபக் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இதையும் படிங்க: மஞ்சுமெல் பாய்ஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியீடு! ரிலீஸ் தேதி எப்போ? - Manjummel Boys OTT Release Date

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.