ETV Bharat / state

மே மாதத்தில் மத்திய அரசின் கேபினட் செயலாளர் ஆலோசனைக் கூட்டம்? அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Minister Thangam Thennarasu: மே 1ஆம் தேதி மத்திய அரசின் கேபினட் செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடர்பான தகவல்களை அறிந்து, தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவித்து நடவடிக்கை எடுக்கும் பணியில் திமுகவின் வழக்கறிஞர் அணி ஈடுபட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Minister Thangam Thennarasu
Minister Thangam Thennarasu
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 7:05 PM IST

Updated : Apr 9, 2024, 8:12 PM IST

Minister Thangam Thennarasu

திருநெல்வேலி: இந்தியா கூட்டணி சார்பில் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் வரும் 12ஆம் தேதி நடக்கும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்கிறார்.

இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், பெல் மைதானத்தை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்டப் பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் மற்றும் திமுகவினர் நேரில் பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "12ஆம் தேதி நெல்லை பாளையங்கோட்டை பெல் பள்ளி மைதானத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பிரச்சாரம் செய்கிறார். அதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டோம்.

நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ராகுல் காந்தி வருகை இந்த வெற்றியை மேலும் வலுப்படுத்தும். தொண்டர்களிடையே உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நெல்லை நாடாளுமன்றத் தொகுதிக்கு வருகை தருவது குறித்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கூடிய விரைவில் ராகுல் காந்தி வருகைக்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ அவரது பிரச்சாரத் திட்டம் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, மே 1ஆம் தேதி மத்திய அரசின் கேபினட் செயலாளர் தலைமையில், வரும் நூறு நாட்களுக்கான அரசுத் திட்டங்கள் குறித்த ஒரு கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குப் புறம்பானதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இது தேர்தல் ஆணையத்திடம் கேட்க வேண்டிய கேள்வி.

தேர்தல் நடத்தை விதிமுறை என்பது எல்லோருக்கும் பொதுவானது. சில தவிர்க்கவே முடியாத சூழலில் மட்டும் தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதியினைப் பெற்று, இதுபோன்ற கூட்டங்களை நடத்தலாம். மேலும், திமுகவின் வழக்கறிஞர் அணியும் இது போன்ற தகவல்களை உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது" என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க: “சேலத்தைப் பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் தெரியாது” - உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!

Last Updated : Apr 9, 2024, 8:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.