ETV Bharat / state

கன்னியாகுமரி தென்னை நாருக்கு புவிசார் குறியீடு பெற ஏற்பாடு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு! - TN Assembly Session 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 1:24 PM IST

TN MSME Development Sector: கன்னியாகுமரி தென்னை நாருக்கு புவிசார் குறியீடு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: நடப்பாண்டிற்கான (2024 - 2025) தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 26) நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் கயிறு தொழிலை ஊக்குவிக்க செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா? என்று நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், "கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டிற்கு 25 கோடி தேங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. தென்னை மட்டையில் இருந்து தென்னை நார் உள்ளிட்ட கயிறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், கன்னியாகுமரியில் 300 தென்னை நார் சார்ந்த நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதன் மூலம் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு உருவாகி உள்ளது. கன்னியாகுமரியில் தரமான நார் உற்பத்தி செய்யப்படுவதால் இதனை நவீன முறையில் மேம்படுத்த குறு குழுமங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தவிர, 20 தொழில் முனைவோர்கள் ஒன்று சேர்ந்து கயிறு குழுமம் உற்பத்தி செய்ய முன்வந்தால் கயிறு குழுமம் அமைக்க உதவி செய்யப்படும். மேலும், கன்னியாகுமரி தென்னை நாருக்கு புவிசார் குறியீடு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் வினாக்கள் விடைகள் நேரத்தின் போது பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 97 திருமண மண்டபங்கள் ரூ.350 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதுமட்டும் அல்லாது, செப்டம்பர் மாதம் இறுதிக்குள் தமிழ்நாட்டில் அமைந்துள்ள 1900 திருக்கோயில்களில் குடமுழுக்கு திருவிழா நடத்தி முடிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: "வரலாற்று சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும்" - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.