ETV Bharat / state

நெல்லையப்பர் கோயில் தேர் வடம் அறுந்ததற்கு பக்தர்கள் காரணமா? - அமைச்சர் சேகர் பாபு கூறியது என்ன? - Nellaiappar chariot festival issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 22, 2024, 7:45 PM IST

Nellaiappar Temple Chariot Festival Issue: நெல்லையப்பர் கோயில் திருத்தேர் சக்கரத்தில் முன்பகுதியில் வைக்கப்பட்ட தேர் கட்டை அகற்றப்பட்டு பின்னாலிருந்து நெம்புகோல் தருவதற்கு முன்பாகவே பக்தர்கள் பக்தி பரவசத்தால் ஒட்டுமொத்தமாக வடத்தைப் பிடித்து இழுத்ததன் காரணமாக தேர் வடம் அறுந்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.

நெல்லையப்பர் திருக்கோயில் தேர், அமைச்சர் சேகர்பாபு
நெல்லையப்பர் திருக்கோயில் தேர், அமைச்சர் சேகர்பாபு (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டத்தின் போது தேர் வடம் அடுத்தடுத்து அறுந்து விழந்த சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பி பேசு பொருளாகிய நிலையில், இது குறித்து இன்று கூடிய தமிழக சட்டசபையின் கேள்வி நேரத்தின் போது கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவை துணைத் தலைவருமான கு.பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.

அப்போது, நெல்லையப்பர் கோயிலில் தேர் இழுக்கும் போது கயிறு சரி இல்லை என்று அங்கிருப்பவர்களும், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளிலும் செய்தி வந்தது. அந்த தேருக்கு இரும்பு சக்கரம் மாற்றப்பட்டு இருக்கிறது. திருவண்ணாமலை திருக்கோயிலில் தேரை இழுப்பதற்கு இரும்பு சங்கிலிகள் இருப்பதை போல எல்லா தேரோட்டங்களிலும் இரும்பு சங்கிலிகளை அமைத்து அதை இழுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதை அறிய விரும்புவதாக கேள்விகளை முன்வைத்தார்.

இதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "ஆசியாவில் இருக்கின்ற மிகப்பெரிய தேர்களில் மூன்றாவது தேர் திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் தேர். 28 அடி நீள, அகலம் கொண்ட 80 அடி உயரமுள்ள தேரானது திருவிழாவின் 9 ஆம் நாள் உற்சவத்தின் இறுதி நாளாக நேற்றைக்கு தேர் வடம் பிடித்து இழுக்கின்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

திருத்தேர் சக்கரத்தில் முன்பகுதியில் வைக்கப்பட்ட தேர் கட்டை அகற்றப்பட்டு பின்னாலிருந்து நெம்புகோல் தருவதற்கு முன்பாகவே பக்தர்கள் பக்தி பரவசத்தால் ஒட்டுமொத்தமாக வடத்தைப் பிடித்து இழுத்ததன் காரணமாக தேர் வடம் அறுந்துள்ளது.

திருக்கோயில் தேரோட்டத்தின் போது மாற்று வடம் தயார் நிலையில் எப்போதும் இருக்கும். அந்தவகையில், அதற்கு மாற்றாக திருச்செந்தூர் தேரின் வடம் தயாராக வைக்கப்பட்டு இருந்தது. உடனடியாக அந்த தேர் வடத்தை இணைத்து வெற்றிகரமாக நேற்று இரவு 9:30 மணி அளவில் திருத்தேர் நிலையை அடைந்தது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லா தேர்களுக்கும் தேரின் உடைய இணைப்பு பகுதிக்கு இரும்புச்சங்கிலி இருக்கும். பக்தர்கள் அனைவரும் வடம் பிடிக்க வேண்டி இருப்பதால் தேரை இழுப்பதற்கு வடம் எப்பொழுதும் கயிற்றினால் தான் நீளமாக இழுத்துச் செல்ல முடியும் என்ற காரணத்தினால் தான் அனைத்து திருத்தேர்களிலும் வடம் அதிக எடை கொண்ட கயிற்றினால் பின்னப்படுகின்றது. நெல்லையப்பர் திருக்கோயில் தேரானது 450 டன் எடை கொண்டதாகும்.

நேற்றைய தினம் நடைபெற்ற தேரோட்டத்திற்கு முன்பாக தீயணைப்புத்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் தேருக்கும் வடத்திற்கும் உறுதி சான்றிதழ் அளித்த நிலையில் தான் தேரோட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எந்தெந்த திருத்தேர்களுக்கெல்லாம் சங்கிலிகள் தேவையோ, அங்கெல்லாம் பொருத்தப்பட்டு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிலளித்தார்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை: இருவேறு விபத்துகளில் கிரிவலம் வந்த பக்தர்கள் உள்ளிட்ட 4 பேர் பலி! - Tiruvannamalai car accident

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.