ETV Bharat / state

"தமிழகத்தில் இதுவரை 16 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன" - அமைச்சர் சக்கரபாணி தகவல்! - ration cards - RATION CARDS

Minister Sakkarapani : தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று இதுவரையில் 16 லட்சம் குடும்பங்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது எனவும், 94 ஆயிரம் குடும்பங்களுக்கு அரசி வழங்கும் குடும்ப அட்டையானது வழங்கப்பட உள்ளது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சக்கரபாணி
அமைச்சர் சக்கரபாணி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2024, 11:01 PM IST

சென்னை : உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர், "தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று இதுவரையில் 16 லட்சம் குடும்பங்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், குடும்ப அட்டைகள் வேண்டி இதுவரையில் 3 லட்சம் விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சுமார் 94 ஆயிரம் குடும்பங்களுக்கு அரசி வழங்கும் குடும்ப அட்டையானது வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை சார்பில் இதுவரை 680 அரிசி ஆலைகள் கட்டப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் புதிய ஆலைகள் ஆகும். தமிழகத்தை பொறுத்தவரையில் மக்கள் தொகைக்கேற்ப ஒரு மாதத்திற்கு 3 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுகிறது.

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நமது தமிழ்நாடு முதலமைச்சர் நெல் கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுத்துள்ளார். இதன் காரணமாக, ஒரு குவின்டால் நெல்லானது ரூ.2400-க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது. அதேபோல் அடுத்த ஆண்டு நெல் கொள்முதலானது ரூ.2600 வரை உயர்த்தி வழங்கப்படும். மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் நியாயவிலைக் கடைகள் வாடகை இடத்தில் செயல்படுத்தப்பட்டு வந்தால் அவற்றை சொந்த இடத்தில் கட்டித் தருவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் பல நாடுகள் பங்கேற்க கூடிய ஒரு கூட்டத்தை இந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் கோதுமை 23 ஆயிரம் மெட்ரிக் டன் தேவைப்படக்கூடிய நிலையில், மத்திய அரசு 8 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே வழங்கி வருகிறது. மேலும், 15 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையானது தமிழகத்திற்கு தேவைப்படுகிறது" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : தாமதமாகும் ‘சமக்ரா சிக்ஷா’ கல்வி நிதி; பிரதமருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்! - CM Stalin letter to PM Modi

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.