ஈரோடு: நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி, ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. இதில் நாளை மறுநாள் (ஏப்.19) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (ஏப்.17) மாலையுடன் நிறைவடைகிறது. ஆகவே, தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சியினரும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.
அந்த வகையில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரகாஷ் என்பவரை ஆதரித்து, வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு நகரில் உள்ள அனைத்து பகுதியிலும், கூட்டணிக் கட்சியினருடன் இனைந்து, தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, "அதிமுக அறிவித்த திடங்களையே நாங்கள் அறிவிக்கவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட 505 திட்டங்கள் அனைத்தும் புதிய திடங்கள்தான். 49 திட்டங்கள் மட்டுமே இன்னும் செய்யவில்லை என பாரதிய ஜனதா கட்சியே கணக்கிட்டு, சான்றிதழ் கொடுத்தது போல கூறியுள்ளது.
எல்என்டி குடிநீர் திட்டம், அத்திக்கடவு திட்டம் முறையாக முடிக்கவில்லை. திமுக அரசு தான் ஒழுங்குபடுத்தி, திட்டம் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் குறை கூறுவது தவறு" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்களுக்கு என்ன செய்தீர்கள்? - விவாதிக்க திமுகவினருக்கு அழைப்பு விடுத்த முன்னாள் அமைச்சர்!