ETV Bharat / state

"தமிழகம் கொலை மாநிலம் அல்ல; கலை மாநிலம்" - ஈபிஎஸுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி! - Minister Regupathy about eps

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 29, 2024, 4:51 PM IST

Updated : Jul 29, 2024, 5:45 PM IST

Minister Ragupathy: தொடர் தோல்வி விரக்தியில் தமிழகம் கொலை மாநிலமாக மாறிவிட்டதாக ஈபிஎஸ் குற்றம்சாட்டி வருகிறார் என அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தொடர் தோல்வி விரக்தியில் தமிழகம் கொலை மாநிலமாக மாறிவிட்டதாக ஈபிஎஸ் குற்றம்சாட்டி வருகிறார். தமிழகம் கொலை மாநிலம் அல்ல, கலை மற்றும் அறிவுசார் மாநிலம். சமூக விரோதிகளை களை எடுக்கும் மாநிலம். ஆட்சியுடன் தொடர்புடைய கொலைச் சம்பவங்கள் எதுவும் தமிழகத்தில் நடைபெறவில்லை.

அமைச்சர் ரகுபதி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அண்மையில் நடந்த 5 கொலைச் சம்பவங்களை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார். அதில் ஒன்று புதுவையில் நடந்தது. மற்ற 4 கொலைச்சம்பவங்களும் சொந்த காரணங்களுக்காக நடந்த முன்விரோதக் கொலைகள். சட்டம் - ஒழுங்கு சீர்குலையும் அளவுக்கு எந்த கொலைச் சம்பவமும் தமிழகத்தில் நடக்கவில்லை.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இருந்தபோது 4 கோடி மக்களுக்கு தலைவராக இருந்தார். இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 கோடி மக்களுக்கு தலைவராக இருக்கிறார். மக்கள்தொகை பன்மடங்கு உயர்ந்துள்ளது. எனவே மக்கள்தொகை எண்ணிக்கை அதிகரிப்பதை வைத்து பார்த்தால் கொலைச் சம்பவங்களும் அதிகமாகவோ, குறைவாகவோ தெரியலாம்.

எனவே, கொலைகளுக்கு அரசு எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது. முன்விரோதத்தால்தான் கொலைகள் நடக்கின்றன. அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் கொலைகள் நடக்கிறது என கூற முடியாது என்பதால் அதை குறிப்பிட்டேன்.

ஆனாலும் யார் யாருக்கெல்லாம் முன் விரோதம் உள்ளது என்பதை எல்லாம் கண்டறிந்து வருகிறோம். காவல்துறை வசம் இருக்கும் ரவுடிகளின் பட்டியலைக் கொண்டு ரவுடிகளுக்குள் இடையே உள்ள முன்விரோதங்களை கண்டறிந்து தீர்த்து வைத்து வருகிறோம். கொலைகளை தடுக்க இவ்வாறான முன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் முதலமைச்சர்.

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாலேயே இந்தியாவில் முதன்மையான மாநிலமாக தமிழகம் உள்ளது. தொழிலதிபர்கள் தமிழகத்தை நாடி வருகின்றனர். தமிழகத்தை பின்னோக்கி தள்ள நினைக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு நிறைவேறாது.

ஏ,பி பட்டியலில் உள்ள ரவுடிகள் விசாரிக்கப்படுகின்றனர். காவல்துறையினரால் ரவுடிகள் எச்சரிக்கப்படுகின்றனர். கொலை செய்யப்பட்டு இறந்தவரின் முதல் ஆண்டு நினைவஞ்சலிக்குள் பழிவாங்கி விடுவேன் என்ற உணர்ச்சியில்தான் தற்போது கொலைகள் நடந்துள்ளன. இதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது. ஆனாலும் கொலைகளை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். ரவுடிகள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதால் 97 சதவீத சிறைகள் நிரம்பியுள்ளன.

சீர்திருத்தப்பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருக்கும் சிறார்கள் சீர்திருத்தப்பட்ட பின் வெளியில் அனுப்பப்படுகின்றனர். அவர்கள் வெளியில் வந்த பிறகு நன்னடத்தை அலுவலர்களால் கண்காணிக்கப்படுகின்றனர். பெரும்பாலான சிறார்கள் மீண்டும் சிறை செல்வதில்லை திருந்தி வாழ்கின்றனர்.

முன்னாள் குற்றவாளிகளை நாங்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் புதிது புதிதாக குற்றவாளிகள் உருவாகின்றனர். 100 குற்றவாளிகளை காவல்துறை கண்காணித்துக் கொண்டிருக்கும்போது புதிதாக 2 குற்றவாளிகள் உருவானால் நாங்கள் என்ன செய்ய முடியும்? புதிதாக உருவாகும் குற்றவாளிகளையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து கண்காணிக்கிறோம்.

ரவுடிகளுக்கு, கொலைக் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனைகள் வாங்கித் தரப்படும். அச்சுறுத்தல் இருக்கும் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம். ஆனால், யாரும் அப்படியான கோரிக்கைகளை முன்வைப்பதில்லை. ஜான் பாண்டின் போன்ற அரசியல்வாதிகள் அரசிடம் பாதுகாப்பு கோரி கோரிக்கை விடுத்தால் உள்துறையிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

கிளைச் சிறைகள் மூடப்படும் என்பன போன்ற வதந்திகளுக்கு பதில் கூற முடியாது. மோசமான நிலையில் உள்ள கிளைச் சிறைகள் பழுது பார்க்கப்பட்டு அவற்றை தொடர்ந்து இயக்கவே கூறியுள்ளோம். எந்த கிளைச் சிறையையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை.

பழுது பார்க்க நிதி கேட்கப்பட்டுள்ளது. ஆணவக் கொலை தொடர்பாக அரசு தைரியமான முடிவை எடுக்கும் ஒருபோதும் ஆணவக் கொலையை அரசு அனுமதிக்காது, ஆதரிக்காது. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்படும்" என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: திருவான்மியூரில் கோயில் கோபுரத்திலிருந்து தவறி விழுந்த சிவனடியார் உயிரிழப்பு! - CHENNAI TEMPLE ACCIDENT

Last Updated : Jul 29, 2024, 5:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.