ETV Bharat / state

"வாதத்திற்கு மருந்துண்டு, பிடிவாதத்திற்கு மருந்தில்லை" - ஆளுநரை சாடிய அமைச்சர் ரகுபதி! - saffron color Thiruvalluvar picture

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 3:38 PM IST

Saffron Color Thiruvalluvar Picture Issue: “நமது கெட்ட நேரம், இது போன்ற ஆளுநர் நமக்கு வந்து வாய்த்துள்ளார். வாதத்திற்கு மருந்துண்டு பிடிவாதத்திற்கு மருந்தில்லை” என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Law Minister S Regupathy
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி (Credits - ETV Bharat Tamil Nadu)

புதுக்கோட்டை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று (மே 24) மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழில், திருவள்ளுவர் காவி உடை அணிந்திருப்பதுபோல அச்சிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆளுநர் மாளிகையில் காவி உடை மற்றும் கழுத்தில் ருத்ராட்சம் அணிந்திருப்பது போல உள்ள திருவள்ளுவரின் புகைப்படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்த புகைப்படமும் ஆளுநர் மாளிகையின் 'X' வலைத்தளப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

தற்போது இந்த நிகழ்வு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இந்த சர்ச்சை குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அமைச்சர் ரகுபதி, “குரங்கு கையில் பூ மாலை கிடைத்தால் அது அந்த மாலையை பிய்த்துக்கொண்டேதான் இருக்கும். அதுபோல் நமது கெட்ட நேரம், இது போன்ற ஆளுநர் நமக்கு வந்து வாய்த்துள்ளார். ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து சர்ச்சை கிளம்பியது. மீண்டும் திருவள்ளுவருக்கு காவி உடை என்றால் ஆளுநரை என்னதான் செய்ய முடியும்? வாதத்திற்கு மருந்துண்டு பிடிவாதத்திற்கு மருந்தில்லை" என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ச்சியாக பேசிய அவர், "இந்தியா கூட்டணி இந்த முறை 300ல் இருந்து 370 வரை கைப்பற்றி மத்தியில் ஆட்சி அமைக்கும். இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. கேரளா அரசு அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சரும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது, எடுக்கவும் மாட்டார்கள். போதை புழக்கத்தை எந்த அளவுக்கு தடுத்து இருக்கிறோம் என்பதை நாங்கள் எவ்வளவு பிடித்திருக்கிறோம் என்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். நாங்கள் தடுப்பதால் தான் இவ்வளவு போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

எங்களைப் பொறுத்தவரை, நிச்சயமாக தமிழ்நாடு முதலமைச்சர் போதைப் பொருள் நடமாட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். இதனால் மாணவர்களின் வாழ்வு கெடும் என்று உணர்ந்தவர் அவர். நிச்சயம் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பது தான் எங்களது லட்சியம்.

ஒடிசாவில் தமிழர்களை திருடர்கள் என்று தமிழர்களுக்கு விரோதமாக பேசுகின்றனர். தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழர்களைப் போற்றுகின்றனர். இது என்னவென்று தெரியவில்லை. இரட்டை நிலைப்பாடு நாங்கள் எடுப்பது கிடையாது. நாங்கள் என்றைக்கும் ஒரே நிலைப்பாடுதான்" என்று கூறினார்.

இதையும் படிங்க: பீலா வெங்கடேசன் அளித்த புகாரில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் அதிரடி கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.