ETV Bharat / state

“பாமக டெபாசிட் வாங்கியதே பெரிய விஷயம்”.. அமைச்சர் பொன்முடி பேச்சு! - Vikravandi By Election results

Ponmudi: பாமக டெபாசிட் வாங்கியது பெரிய விஷயம், அதனையே அவர்கள் மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Ponmudi
பொன்முடி மற்றும் அன்புமணி ராமதாஸ் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 13, 2024, 10:29 PM IST

Updated : Jul 13, 2024, 10:45 PM IST

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் கடந்த ஜூலை 10ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதன் முடிவில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், அன்னியூர் சிவா உடன் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய பொன்முடி, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூன்றாண்டு கால ஆட்சியில் பெண்களுக்கு தீட்டிய மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் இலவசப் பேருந்து திட்டம் போன்ற பெண்கள் பயன்பெறும் பல நல்ல திட்டங்களை பெண்களுக்கு வழங்கியதால் தான் அனைத்து பெண்களும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்து, இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியை அளித்துள்ளனர்.

பின்னர், பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்த கேள்விக்கு, நேரத்திற்கு தகுந்தார் போல் பேசக்கூடியவர். அவரது கட்சியினரும் அப்படித்தான் நேரத்திற்கு தகுந்தார் போல் மாறிக் கொள்வர். அவர்களுக்கு கொள்கை எல்லாம் ஒன்றும் கிடையாது. அவர் சொல்வது சகஜமான விஷயம், அவர் சொல்வதை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

நாங்கள் தான் ஜெயிப்போம் என சொன்னார். ஆனால் ஜெயித்தார்களா? இவர்கள் டெபாசிட் வாங்கியது பெரிய விஷயம். டெபாசிட் வாங்கியதற்கு இவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். எதிர்க்கட்சி என்றால் சில குறைகளைச் சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக சொல்கிறார்களே தவிர, அதை ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” எனப் பேசினார்.

இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் களம் கண்ட பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56 ஆயிரத்து 296 வாக்குகள் பெற்றார். அவரைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10 ஆயிரத்து 602 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார்.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்.. அதிமுகவின் வாக்குகள் யாருக்கு சென்றது?

Last Updated : Jul 13, 2024, 10:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.