ETV Bharat / state

மன்னிப்பு கேட்டாலும் இர்பான் மீது நடவடிக்கை உறுதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆவேசம்

யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை துண்டித்த வீடியோ வைரலான நிலையில், அவர் மன்னிப்புக் கேட்டாலும் நாங்கள் விடமாட்டோம் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இர்ஃபான், அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இர்ஃபான், அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2024, 5:25 PM IST

Updated : Oct 22, 2024, 6:13 PM IST

சென்னை: தமிழின் பிரபல யூடியூபர் மற்றும் ஃபுட் ரிவியூ விளாகரான இர்ஃபான் தனக்கு பெண் குழந்தை பிறந்ததை வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டார். ஆபரேஷன் தியேட்டரில் மருத்துவர்களுடன் இருந்த இர்பான் தனது மனைவிக்கு சி செக்ஷன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பதை வீடியோவாக பதிவு செய்திருந்தார். அப்போது குழந்தையை வெளியே எடுத்ததும், நீங்கள் தொப்புள் கொடியை கட் செய்ய விரும்புகிறீர்களா? என மருத்துவர் கேட்பதும், இதனை கேட்டு ஸ்டெர்லைஸ் செய்யப்பட்ட கத்திரிக்கோல் மூலம் இர்பானே தொப்புள் கொடியை துண்டிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.

இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மருத்துவ விதிகளின்படி சுகப்பிரசவத்தின் போது மட்டுமே பெண்ணின் கணவரோ, தாயாரோ உடனிருக்க முடியும். இதற்கு மாறாக அறுவை சிகிச்சையின் போது இர்ஃபானையும், வீடியோ எடுக்கும் நபரையும் அனுமதித்தது எப்படி? என கேள்வி எழுப்பப்பட்டது. முன்னதாக கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து இர்ஃபான் வெளிப்படையாக அறிவித்ததும் சர்ச்சையில் சிக்கியது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் இது தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு பதிலளித்த அவர், "இர்ஃபான் அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்று மருத்துவர் அல்லாத ஒருவர் தொப்புள் கொடியை துண்டித்தது தேசிய மருத்துவச் சட்ட விதிகளை மீறியது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சட்டப்படி நோட்டீஸ் கொடுத்துள்ளோம்" என்றார்.

மேலும், செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் மருத்துவத்துறை சார்பில் இர்ஃபான் மீது புகார் அளித்துள்ளோம் எனவும், தொப்புள் கொடியை அறுக்க அனுமதித்த தனியார் மருத்துவமனை மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்கவும் புகார் தரப்பட்டுள்ளதாகக் கூறினார். அந்த மருத்துவர் மீது தமிழ்நாடு மருத்துவ இயக்குனரத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்த அமைச்சர் , அந்த மருத்துவர் பயிற்சி செய்வது தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாதகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க : யூடியூபர் இர்பான் குழந்தை பிறப்பு வீடியோ - நடவடிக்கை எடுத்த மருத்துவத்துறை

இர்ஃபான் குழந்தையின் பாலினத்தை அறிவித்தது குறித்தும் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவிக்க தமிழகத்தில் மட்டும் தான் தடை உள்ளது, ஆனால் இர்ஃபான் அதனை துபாயில் கண்டறிந்ததாகக் கூறினார். அத்தோடு, மன்னிப்பும் கேட்டதால் அதனை ஏற்றுக்கொண்டோம் என கூறினார். அரசியல் செல்வாக்கு காரணமாக இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் உள்ளதா? என்ற கேள்விக்கு, தவறு செய்தவர்களை இந்த அரசு காப்பாற்ற நினைக்காது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். தொப்புள் கொடி விவகாரத்தில் இர்ஃபான் மன்னிப்புக் கேட்டாலும் சுகாதாரத்துறை விடமாட்டோம்" என்றும் அமைச்சர் உறுதிபடக் கூறினார்.

இர்ஃபான் மான் இறைச்சி சமைப்பது, முதலை இறைச்சி சாப்பிடுவது போன்ற வீடியோக்களை வெளிநாட்டில் பதிவு செய்து தனது சேனலில் வெளியிட்டார். இவை இந்தியாவில் சட்டப்படி தடை செய்யப்பட்டவை என்றாலும் வெளிநாடுகளில் பதிவு செய்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Oct 22, 2024, 6:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.