சென்னை: பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி பகுதிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து வானிலை ஆராய்ச்சி மையத்தின் அறிவிப்புகளுக்கு ஏற்ப தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை: சிட்லபாக்கம், சேலையூர், செம்பாக்கம், ராஜகீழ்ப்பாக்கம், கீழ்கட்டளை, பல்லாவரம், நன்மங்கலம் உள்ளிட்ட 13 ஏரிகளில் இருந்து வரும் உபரி நீரை நாராயணபுரம் ஏரி தக்கவைக்கிறது. நாராயணபுரம் ஏரி நீர்மட்டம் உயரும்பொழுது குடியிருப்புகளுக்கும் புகுந்து பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. நீர்வளத்துறை சார்பில், ரூ. 44 கோடி செலவில் மழை நீர் வடிகால் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
கூடுதலாக ஆயிரம் கன அடி நீரை வெளியேற்ற புதிய மழை நீர் வடிகால் நீர்வளத்துறை சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு 3 மாதங்களாகும் என்பதால், தற்காலிகமாக உபரி நீரை தொடர்ந்து வெளியேற்ற நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. புதிய கால்வாய் 10 அடி அகலம் 2.1 அடி ஆழம் கொண்ட கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: "மருத்துவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்" அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
முத்துலட்சுமி ரெட்டி திட்டம்: முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் முறைகேடு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இத்திட்டம் தொடர்பாக புதுக்கோட்டை பகுதியில் தணிக்கை குழு ஆய்வு செய்துள்ளனர். இதில், அங்குள்ள ஊழியர்கள் மகப்பேறு உதவி பெறும் பயனாளிகள் தொடர்பாக போலி தகவல்களை தயாரித்து, ரூ.18 லட்சத்து 60 ஆயிரம் வரை மோசடி செய்து 16 வங்கி கணக்குகளில் வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க தெரிவித்துள்ளோம். இது குறித்து தணிக்கை அலுவலர் விசாரணை மேற்கொள்ள உள்ளார். வட்டார உதவியாளர் தற்காலிக ஊழியர் என்பதால் அவரை பணி நிறுத்தம் செய்துள்ளோம். இளநிலை உதவியாளர் டிஎன்பிஎஸ்சி மூலம் பணிக்கு வருபவர். அவரை உடனடியாக பணி நிறுத்தம் செய்ய முடியாது.
பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN pic.twitter.com/85R9A5JRht
— Subramanian.Ma (@Subramanian_ma) November 13, 2024
எனவே, தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் மோசடி நடைபெற்றுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு உடன் இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவர் தாக்குதல்: சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சிறப்பு மருத்துவ முகாம்கள் கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. 32 ஆயிரத்து 401 மருத்துவ முகாம்கள் இதுவரையில் நடைபெற்று ள்ளது. 17 லட்சத்து 85 ஆயிரத்து 349 மேற்பட்டவர்கள் மழைக்கால மருத்துவ முகாம் மூலம் பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த காலி பணியிடங்களில் 1,553 மருத்துவர்கள் இல்லை. அதற்கு தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்