ETV Bharat / state

"தொடரும் நீட் தேர்வு குளறுபடி.. சட்டத்துறையுடன் ஆலோசனை செய்து முடிவு" - மா.சுப்பிரமணியன் தகவல்! - Minister Ma Subramanian - MINISTER MA SUBRAMANIAN

Minister Ma Subramanian: நீட் தேர்வு குளறுபடிகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டத்துறையிலும் கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் புகைப்படம்
நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 11, 2024, 3:44 PM IST

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் யோகா சிகிச்சையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி மூத்தோர் நல மருத்துவமனையை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். அதில் 8.46 ஏக்கர் நிலப்பரப்பில் 200 படுக்கைகள், 40 தீவிர சிகிச்சை படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் மருத்துவ சேவையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

மேலும், 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் இங்கு பயன்பெற்றுள்ளனர், 220 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளது. 44 ஆயிரத்து 761 ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பிசியோதெரபி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நோயாளிகளுக்காக பிரத்தியேகமாக நூலகம், முதியோர்களுக்கு கேரம், பல்லாங்குழி போன்ற விளையாட்டு உபகரணங்களும் உள்ளது.

முதியோர்களுக்காக யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பக்க விளைவு இல்லாத சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. உபவாச சிகிச்சை, யோகா சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, வாழையிலை குளியல், நீர் சிகிச்சை, அக்கு பஞ்சர், மனநல ஆலோசனை போன்றவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முதியவர்கள் கோபமடையாமலும், அச்சமின்றி இருக்க இந்த பயிற்சிகள் ஒரு உதவியாக இருக்கும், இதுபோன்று பல்வேறு சிகிச்சைகளை தொடங்குவதில் இந்த அரசு பெருமை கொள்கிறது

தொடரும் நீட் தேர்வு குளறுபடி: நீட் தேர்வு தொடர்பாக 10 முறைக்கு மேல் நீட் விலக்கிற்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். ஒன்றிய அரசின் சார்பில், குறிப்பாக குடியரசுத் தலைவர் அலுவலகத்திலிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு இங்கிருந்து நிறைவேற்றப்பட்ட மசோதா உள்துறை அமைச்சகத்தின் மூலம் தமிழ்நாட்டில் இருக்கின்ற உயர் கல்வித்துறைக்கும், மருத்துவக் கல்வித்துறை நிர்வாகத்திற்கும் தொடர்ந்து 7 முறை சிறிய சிறிய விளக்கங்களைக் கேட்டு பதில் கடிதம் அனுப்பினர்.

சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி அதற்கான பதிலையும் முறையாக அனுப்பி வைத்திருக்கிறோம். எனவே, மத்திய அரசு குடியரசுத் தலைவரிடத்தில் சொல்லி, மாநில அரசுகள் விரும்புகிற வகையில் நீட் தேர்விலிருந்து விலக்கு தர வேண்டும் என்ற வகையில் முடிவெடுப்பார்கள் என்று கருதுகிறோம்.

நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கியதில் குளறுபடி இருப்பதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண்களை 67 மாணவர்கள் எடுத்துள்ளனர். தேர்விற்கான மதிப்பெண்கள் வழங்கும் விதிமுறைப்படி, மாணவர்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண் வழங்கினாலும், 718 அல்லது 719 என மதிப்பெண்கள் வராது, 716 அல்லது 715 என்ற முறையில் தான் வரும்.

சட்டத்துறையுடன் ஆலோசனை: நீட் தேர்வு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதுபோன்று வழங்குவதற்கு எப்பொழுது உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது என்பது குறித்து எந்தவித தெளிவான விளக்கமும் இல்லை. தேசிய தேர்வு முகமை அளித்துள்ள விளக்கத்தினை ஏற்க முடியாது. நீட்டுக்கு எதிரான போராட்டம் என்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

நீட் தேர்வில் தவறு நடக்கவில்லை என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது. நீட் தேர்வு குளறுபடிகள் குறித்து பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு அரசு வழக்கு தாக்கல் செய்வது குறித்து சட்டத்துறையுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும்.

கோரிக்கைகள்: தமிழ்நாட்டில் மொத்தம் 36 மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். புதிதாக 6 மருத்துவக் கல்லூரி தமிழ்நாட்டிற்கு வர வேண்டும். தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள சுகாதாரத்துறை அமைச்சரிடம், ஏற்கனவே தமிழ்நாடு அரசு வலியுறுத்துள்ள கோரிக்கைகளை நேரில் பார்க்கும்போது மீண்டும் வலியுறுத்துவோம்.

மேலும், எய்ம்ஸ் மருத்துவமனையை உடனே கட்டி முடிக்க வேண்டும், புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், தீவிர சிகிச்சைப் பிரிவு போன்றவற்றிற்கு அனுமதி வேண்டும் என பல கோரிக்கைகளை வைக்க உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒரே நபருக்கு 8 மணி நேரத்தில் 3 சிக்கலான அறுவை சிகிச்சை.. மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.