ETV Bharat / state

“மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் ஒரு கோடி பயனாளிகளை தாண்டி செயல்படுகிறது” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் - Minister ma subramanian - MINISTER MA SUBRAMANIAN

Ma. Subramanian: இந்தியாவில் உள்ள 36 மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்வதில் தமிழ்நாடு தேசிய அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 9, 2024, 6:40 PM IST

சென்னை: அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்(Harvard University) நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கட்டமைப்பு மற்றும் சாதனைகள் குறித்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “மருத்துவத் துறையில் தமிழ்நாடு சிறப்பான சாதனைகள் செய்து, சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவதில் சிறந்து விளங்குகிறது. 1923-ல் தொடங்கப்பட்ட பொது சுகாதார அமைப்பின் மூலம் பல்வேறு பொது சுகாதார திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

வருமுன் காப்போம் திட்டம்: ஏழை எளியோர்களுக்காக 2009ல் காப்பீடு திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இந்த திட்டம் “முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டமாக’’ கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலமாக 14 மில்லியன் மக்கள் பயன்பெற்றுள்ளனர். மேலும், ‘வருமுன் காப்போம் திட்டம்’ மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு விரிவான சுகாதார பரிசோதனை, சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.

108 அவசரகால பராமரிப்பு சேவை திட்டம்: 2008ல் 108 அவசரகால பராமரிப்பு சேவை திட்டம் தொடங்கப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கண்பார்வை குறைபாடுகளைக் கண்டறிய 2009ல் ‘கண்ணொளி காப்போம்’ திட்டம் தொடங்கப்பட்டு, 2.7 லட்சம் மாணவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.

இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம்: சாலை போக்குவரத்து விபத்துக்களுக்கும், இலவச அவசர மருத்துவ சிகிச்சை வழங்கும் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் மூலமாக 2 லட்சத்து 52 ஆயிரத்து 981 நோயாளிகள் கட்டணமில்லா சிகிச்சையைப் பெற்றுள்ளனர். ஆய்வக மாதிரிகளைக் கொண்டு செல்வதற்கான ‘மக்களைத் தேடி ஆய்வகம் திட்டம்’ (Hub and Spoke Model) 2024 ல் துவக்கப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 216 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதயம் காப்போம் திட்டம்: இதயம் காப்போம் திட்டத்தில் மொத்தம் 8 ஆயிரத்து 500 நோயாளிகளுக்கு அவசர மாரடைப்பு மருந்துகள் (Loading Dose) வழங்கப்பட்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. அதேபோல், ‘சிறுநீரகம் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 60 ஆயிரம் நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டு, 3 ஆயிரத்து 361 நோயாளிகள் நாள்பட்ட சிறுநீரக நோய்களுக்கு சந்தேகிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு உயர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.

தொழிலாளரை தேடி மருத்துவம்: தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், ‘தொழிலாளரை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 486 தொழிற்சாலைகளில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 652 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 26 ஆயிரத்து 471 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.

ரேபிஸ் தடுப்பூசி: இந்தியாவிலேயே மாநிலம் தழுவிய வெறிநாய் கடி (Rabies) கட்டுப்பாட்டு முயற்சியை செயல்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு. 2 ஆயிரத்து 286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ரேபிஸ் தடுப்பு தடுப்பூசி (ARV) மற்றும் ஆன்டி-ஸ்னேக் வெனோம் (ASV) வழங்கப்படுகிறது. ARV மற்றும் ASV இன் இருப்பு முறையாக கண்காணிக்கப்பட்டு ஆன்லைன் போர்டல் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: தமிழ்நாட்டில் உடல் உறுப்புகளை தானமாக பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம், சிறுகுடல், வயிறு, கைகள் என மொத்தம் 7 ஆயிரத்து 783 உறுப்புகள், 3 ஆயிரத்து 950 சிறிய உறுப்புகள் மற்றும் திசுக்கள் தானமாக பெறப்பட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 36 மாநிலங்களில், அதிக எண்ணிக்கையிலான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்வதில் தமிழ்நாடு தொடர்ந்து தேசிய அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

மக்களைத்தேடி மருத்துவம் : மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் ஒருகோடி பயனாளிகளை தாண்டி செயல்பட்டு வருகிறது. மருத்துவ சேவைகள் மலிவாக கிடைக்கக்கூடிய, அணுகக்கூடியதாக மாற்றுவதன் மூலம் மேம்படுத்தப்பட்ட சுகாதார சேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் நிலை ஏற்படும். தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் அதிக சமபங்கு, சமூக உள்ளடக்கம் மற்றும் சமூகப் பங்கேற்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வலுவடைந்து வருகிறது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல்.. மனைவி பொற்கொடிக்கு அளித்த வாக்குறுதி! - mk stalin meet armstrong family

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.