ETV Bharat / state

தாம்பரம் மாநகராட்சி இன்னும் பெருசாகும்... வண்டலூரை ஒட்டிய கிராமங்களும் சிட்டிக்குள்ள சேர போகுது - அமைச்சர் தகவல்!

தாம்பரம் மாநகராட்சியை சுற்றுப்பகுதியில் இருக்கும் கிராமங்கள், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்த்து பெரிய மாநகராட்சியாக உருவாகும் என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நேரு பேட்டி
அமைச்சர் நேரு பேட்டி (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2024, 3:17 PM IST

சென்னை: தாம்பரம் சானடோரியத்தில் தாம்பரம் மாநகராட்சியின் புதிய அலுவலகக் கட்டடம் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என். நேரு, தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி சிறப்பித்தனர். இந்த 3 மாடி கட்டடமானது 43.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படவுள்ளது.

அடிக்கல் நாட்டிய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, தாம்பரத்தை மாநகராட்சியாக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அலுவலகம் கட்டப்பட வேண்டும் என்பதற்காக அரசு சார்பில் 43.40 கோடி நிதி ஒதுக்கி, வருவாய்த் துறையில் இருந்து தாம்பரம் மாநகராட்சிக்கு முதல்வர் வழங்கினார்.

இதில் சில நடைமுறைகளால் ஒரு வருடம் தாமதம் ஆகிவிட்டது. தற்போது நிதி வழங்கப்பட்டிருப்பதால் ஒரு வருடத்தில் தாம்பரம் மாநகராட்சி கட்டடம் கட்டி முதல்வர் திறந்து வைக்க இருக்கிறார்'' என்றார்.

இதையும் படிங்க: "திமுக பார்ட்டியில் ஜே.பி நட்டா" - ஜெயக்குமார் கூறும் மறைமுக கூட்டணி!

மேலும், தாம்பரம் மாநகராட்சி என்பது தற்போது இருக்கும் அளவோடு இல்லாமல் சுற்றுப்பகுதியில் இருக்கும் வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளும் தாம்பரம் மாநகராட்சிகுள்ளாக வருவதற்காக குழு அமைத்து பேச்சுவார்த்தைநடத்தப்பட்டு வருகிறது. எனவே தாம்பரம் பெரிய மாநகராட்சியாக உருவாகும்'' எனக்கூறினார்.

தொடர்ந்து பேசியவர், ''உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் 2 வருடங்கள் இருக்கிறது. அனைத்து அரசு நலதிட்டங்களை நிறைவேற்றுவதற்காக தாம்பரம் மாநகராட்சியை விரிவாக்கம் செய்து, இங்கு இருக்கிற பகுதிகளில் அரசினுடைய திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

என்னை பொருத்தவரை மழை பெய்யட்டும்.. இல்லையென்றால் செம்பரம்பாக்கம் பகுதி குடி தண்ணீருக்கு சிரமமாகிவிடும்.. தமிழகம் முழுவதும் மழை பெய்தால் தான் மக்களுக்கு நல்லது.. குடி தண்ணீர் வேண்டும்.. எனவே, மழை பெய்வதால் இரண்டு நாள் சிரமத்தை பார்க்காதீர்கள்'' என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.