சென்னை: வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் நேற்று மாலை முதல் அதிகாலை வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி இருந்த நிலையில் அவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று ஆய்வு மேற்கொண்டு மழை பதிவு மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: சென்னைவாசிகளே குடையை மறந்துடாதீங்க.. விமான சேவை கடும் பாதிப்பு.. தலைநகரில் தொடரும் மழை!
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், "இதுவரை பெய்துள்ள மழையால் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் இதுவரையில் இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை பாதிப்புகள் தொடர்பான தகவல்களை அலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். பெரிய அளவிலான மழை பாதிப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது அறிவுரையின் பேரில், கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.@mkstalin @tnsdma @CMOTamilnadu@TNDIPRNEWS
— KKSSR Ramachandran (@KKSSRR_DMK) September 26, 2024
(2/2) pic.twitter.com/9TMGF3kIhF
அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது. தொடர்ந்து, நிவாரண முகாம்கள் திறக்கவும், பேரிடர் மீட்பு பணியினர் மீட்பு நடவடிகைகளில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுவரை உயிர் சேதம் எதுவும் நிகழவில்லை. சென்னை உட்பட 15 மாவட்டங்களில் சராசரியாக 0.83 செ.மீ மழை பெய்துள்ளது" இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்