ETV Bharat / state

"காங்கிரஸ் - திமுகவினர் நாங்கள் தான் பெரிய கட்சி என்று நினைக்கக்கூடாது" - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்! - KKSSR Ramachandran - KKSSR RAMACHANDRAN

KKSSR Ramachandran: காங்கிரஸ் கட்சியினர் நாங்கள் தான் பெரிய கட்சி என்றும், திமுகவினர் நாங்கள் தான் பெரிய கட்சியினர் என்றும் ஆளாளுக்கு நினைத்துக் கொண்டிருந்தால் வாக்குகள் நிச்சயமாக சிதறும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

KKSSR Ramachandran
KKSSR Ramachandran
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 31, 2024, 10:30 PM IST

KKSSR Ramachandran

விருதுநகர்: விருதுநகர் மக்களவைத் தொகுதியில், இந்தியா கூட்டணியின் சார்பில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் தேர்தல் கட்சி அலுவலகத்தை, இன்று (மார்ச் 31) வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக, தேர்தல் கட்சி அலுவலகத்தில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் கலந்துகொண்ட, தேர்தல் பிரச்சார வியூகங்கள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியதாவது, "தேர்தல் கட்சி அலுவலகம் திறப்பு விழாவுக்கு எப்படி ஆர்வத்துடன் வந்திருக்கிறீர்களோ, அதேபோல, தேர்தல் பணியையும் ஆர்வத்துடன் செய்ய வேண்டும். மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி அடைய, கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஒருங்கிணைத்துச் செயல்பட்டால் சிதறிக் கிடக்கும் ‌வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் கிடைக்கும்.

காங்கிரஸ் கட்சியினர் நாங்கள் தான் பெரிய கட்சி என்றும், திமுகவினர் நாங்கள் தான் பெரிய கட்சியினர் என்றும், ஆளாளுக்கு நினைத்துக் கொண்டிருந்தால் வாக்குகள் நிச்சயமாகச் சிதறும். இதனால் தோழமைக் கட்சிகளுடன் அரவணைத்து தேர்தல் பணியை மேற்கொள்ள வேண்டும்.

கூட்டணி கட்சியினர் எல்லோரும் சகோதர, சகோதரிகளாக வருகின்ற 17 நாட்கள் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டால் தான் மிகப்பெரிய வெற்றியைப் பெற முடியும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என 40க்கும் 40 வெற்றி பெறுவது உறுதி.

விருதுநகர் நாடாளுமன்றத்தில் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் மாணிக்கம் தாகூருக்கு, அனைத்து மக்களிடத்திலும் நற்பெயர் உள்ளது. ஆகவே, மாணிக்கம் தாகூர் வெற்றி பெறுவது உறுதி. எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது என்பதை உணர்ந்து கொண்டு, ‌தேர்தல் பணிகளைத் ‌தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்" என்று பேசினார்.

இதையும் படிங்க: "மகளிருக்கு 1,000 ரூபாய் கொடுத்து பவுடர் போடுவதா வளர்ச்சி?" - வேட்பாளரிடம் சரமாரி கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.